Entertainment
Bigg Boss Suchitra Dedicated A Song To Balaji Murugadoss
Published
3 weeks agoon
By
admin
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 83 நாட்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் இன்னும் ஒன்பது பேர் அப்படியே இருக்கிறார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல பேர் கலந்து கொண்டார்கள். அதில் சுச்சித்ராவும் ஒருவர். அர்ச்சனாவிற்கு பின்னர் பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டவர் சுசித்ரா தான். பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.

கடந்த சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக மீரா மிதுன், கஸ்தூரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சியில் சூடு பிடித்தது. ஆனால், இந்த முறை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த போது ஒரு கேம் சேஞ்சராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை, மாறாக அவர் தொடர்ந்து அம்மா சென்டிமென்டை வீசிவந்தார். அதே போல இரண்டாம் வைல்டு கார்டு போட்டியாளரான சுசித்ரா ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
அதே போல சமூக வலைத்தளத்தில் இவர் தைரியமாக பல சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் விமர்சித்து இருக்கிறார்.எனவே, இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது கண்டிப்பாக நிகழ்ச்சியில் எதாவது ஒரு சுவாரசியத்தை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால், இவர் உள்ளே நுழைந்தது முதல் பாலாவிற்கு எடுபுடி போல மாறி விட்டார். இதனால் அவரிடத்திலும் சரக்கு இல்லை என்பதால் வரை இந்த வாரம் ரசிகர்கள் வழியனுப்பி வைத்துவிட்டார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்ததும் சுசித்ரா, பாலாஜி குறித்து பல பதிவுகளை போட்டு வந்தார்.
அதே போல பாலாஜி உங்களை அப்படி அசிங்கப்படுத்தினர் இன்னுமா வரை ஆதரவு தெரிவிக்கிறீங்க என்று கமன்ட் செய்துஇருந்தனர். அதற்கு பதில் அளித்த சுசித்ரா, பாலாஜி ஒரு உண்மையான மனிதர், அவர் சத்தமாக பேசுவரே தவிர அவர் எனக்கு மரியாதையை கொடுத்திருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் பாலாஜி குறித்து சுசித்ரா ‘பாலா பாலா’ என்ற பாடல் ஒன்றை பாடி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.