Entertainment
Mouna Ragam Fame Kruthika New Serial Velammal Promo
Published
3 weeks agoon
By
admin
விஜய் தொலைக்காட்சிகளில் பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதிலும் ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, சின்னத் தம்பி என்று சினிமா பட பாணியில் டைட்டில்களை வைத்து வெளியான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி போன்ற தொடர்கள் பார்ட் 1,2,3 என்று ஒளிபரப்பப்பட்டது. அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகம் கூட துவங்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் சஞ்சீவ்விற்கு பதிலாக திருமணம் சீரியல் சித்து நடித்துள்ளார். ராஜா ராணி 2 வை தொடர்ந்து தற்போது அடுத்த சீரியலின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒளிபரப்பான தொடர் தான் மௌன ராகம். இந்த தொடர் இசை, குடும்பம் கதையை பின்னணியாகக் கொண்டது. இந்த சீரியல் வங்காளி மொழி தொடரின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் கிருத்திகா, சபிதா, ராஜீவ் மற்றும் சிப்பி ரஞ்சித் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த தொடரை தாய் செல்வம் என்பவர் இயக்கி இருந்தார். இந்த தொடருக்கு பிரபல இசையமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் பின்னணி இசை அமைத்துஇருந்தார் . சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் பேபி கிருத்திகா. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவந்தது . இந்த சீரியல் 859 எபிசோடுகளை கடந்து இருந்த நிலையில் இந்த சீரியலை திடீரென முடித்துவிட்டனர். இருப்பினும் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த சீரியலில் இரண்டாம் பாகத்தில் கிருத்திகாவிற்கு பதிலாக பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வரும் ரவீனா நடிக்க இருக்கிறார். இது தொடர்பான ப்ரோமோ கூட வெளியானது. இப்படி ஒரு நிலையில் மௌன ராகம் சீரியலில் நடித்த கிருத்திகா தற்போது ‘வேலம்மாள்’ என்ற தொடரில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த சீரியலின் ப்ரோமோ வெளியானது. இந்த ப்ரோமோவை பார்க்கையில் இந்த சீரியலிலும் மௌன ராகம் சீரியலை போன்று அப்பா மகள் செண்டிமெண்ட் தான் இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.