சிவகங்கையை ஆண்டவர் வீரமங்கை வேலு நாச்சியார். இவரைப்பற்றி சிவகங்கை சீமை உள்ளிட்ட படங்களில் லேசான வரலாறு சொல்லப்பட்டிருந்தாலும், முழுமையான வரலாறு என்பது இவரைப்பற்றி இதுவரை சொல்லப்படவில்லை.
இந்நிலையில் 18 கே ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் பெரும் பொருட்செலவில் வீரமங்கை வேலுநாச்சியார் கதையை படமாக தயாரிக்கிறது – இந்தப் படத்தை ராஜேந்திரன் மணிமாறன் என்பவர் இயக்குகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர், கன்னடத்தில் எடுக்கப்பட்ட ‘சூரியவம்சம்’ ரீமேக்கின் ஒளிப்பதிவுக்காக விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். வரும் பொங்கல் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.