மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்குரிய ஆருத்ரா விழா கொண்டாடப்படுகிறது. மார்கழியில் வரும் திருவாதிரையில் இவ்விழா நடக்கிறது.
நடராஜருக்கு உகந்த தலங்களில் ஆருத்ரா விழா சிறப்பாக நடக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் இருக்கும் நடராஜருக்கு மட்டும் ஆருத்ராவிற்கு முதல் நாளே விழா தொடங்கி விடுகிறது. காரணம் என்னவென்றால் இங்கு இருக்கும் நடராஜர் பார்ப்பதற்கரிய பச்சை மரகதகல்லினால் ஆன நடராஜர். மரகதத்திற்கு அதிர்வுகளை தாங்கும் சக்தி இல்லை என்பதால் இங்கு மேளம் அடிக்கப்படுவதில்லை மற்றும் வேறு அதிர்வுகளால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக வருடத்தில் ஆருத்ரா தரிசனத்தன்று அதிகாலை நடராஜருக்கு சந்தனம் பூசப்படும். பின்பு மீண்டும் அடுத்த வருடம் ஆருத்ராவிற்கு முதல் நாள் சந்தனம் கலையப்பட்டு மரகக்கல்லினால் ஆன நடராஜரை பார்க்க அனுமதிக்கப்படும். அன்று ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜரை பார்க்க முடியும்.
இன்று உத்திரகோசமங்கையில் ஆருத்ரா விழா தொடங்கியது. பக்தர்கள் மரகத நடராஜரை கண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.