காலம் மனிதனை எப்படி எல்லாம் வைக்கிறது பாருங்கள். இரண்டு சகோதரன் ஒரு சகோதரி மூன்று பேருமே படித்தவர்கள் நல்ல நிலையில் இருந்தவர்கள். ஒருவர் வக்கீல், ஒருவர் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் இப்படியாக இருந்தவர்கள் தங்களது தாயாரின் திடீர் இழப்பை தாங்கி கொள்ள முடியாமல் மனரீதியாக பாதிக்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே 10 வருடங்களாக இருந்துள்ளனர்.
இப்படி ஒரு சம்பவம் குஜராத்தின் ராஜ்கோட்டில் நடந்துள்ளது. மீட்கப்பட்ட மூவரின் பெயர்அம்ரிஷ், மேக்னா, மற்றும் விஸ்,இவர்கள் வீட்டிற்குள்ளேயே வெளியுலகத்தை பார்க்காமல் 10 வருடமாக கதவை பூட்டிக்கொண்டு இருந்தது அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்து தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் வீட்டுக்குள் செல்லும்போது மனிதக்கழிவுகள், நெடுநாளைய உணவுகள் என அப்படியே இருந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இவர்கள் மீட்கப்பட்டு தற்போது நல்ல நிலையில் உள்ளனர்