Entertainment
Bigg Boss Promo Freeze Task Balaji Murugadoss Has The Guest
Published
4 weeks agoon
By
admin
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.
இப்படி ஒரு நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாராதிக்கான நாமினேஷன் நடைபெற்று இருந்தது . இந்த வாரம் ஆரி தலைவர் ஆகி இருத்தால் அவரை இந்த வார நாமினேஷனில் இல்லை. இந்த வாரம் ஆஜீத், சோம், கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா ஆகியோர் நாமினேட் ஆகி இஇருக்கிறாரகள். இந்த வாரம் ஷிவானி அல்லது ஆஜீத் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி ஒரு நிலையில் இன்று ப்ரீஸ் டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதில் முதல் ஆளாக ஷிவானியின் அம்மா உள்ளே சென்று இருக்கிறார். உள்ளே சென்ற அவர் எதுக்கு இங்கே வந்த, இங்க நீ என்ன செய்தாலும் வெளியில் தெரியாது என்று நினைக்கிறாயா என்று கேட்டுள்ளார். இதை பார்க்கும் போது கடந்த சீசனில் ப்ரீஸ் டாஸ்கின் போது சென்ற லாஸ்லியாவின் தந்தை நினைவு தான் வருகிறது என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் Freeze டாஸ்க்கில் பாலாவை சந்திக்க ஒருவர் வந்துள்ளார். அது அவருடைய சகோதரரா இல்லை நண்பரா என்று தெரியவில்லை. இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில் ஷிவானியை அவரது தாயார் திட்டி தீர்த்துள்ளார் என்பது போல தெரிகிறது. ஷிவானி அவரது அம்மா திட்டியுள்ளதால் இது எல்லாம் என்னால் தான். இது எனக்கு சங்கடமாக இருக்கிறது என்று அழுது புலம்பி இருக்கிறார் பாலா. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது கடந்த சீசன் ஃப்ரீஸ் டாஸ்கின் போது லாஸ்லியாவின் தந்தை வந்த போது அவர் லாஸ்லியாவை திட்டியதால் கவின் கண் கலங்கி அழுததுதான் நினைவிற்கு வருகிறது.