Entertainment
Kaithi And Master Movie Actor And Dubbing Artist Arun Alexander Passed
Published
4 weeks agoon
By
admin
தனது படத்தின் நடிகர் இறந்ததற்கு லோகேஷ் கனகராஜ் உருக்கமான ட்வீட் ஒன்றை செய்துள்ளார். இந்த 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் தமிழ் திரையுலகிற்கு இது கண்டிப்பாக இருண்ட ஆண்டு தான். அந்த ஆண்டு எஸ் பி பி துவங்கி பல்வேறு தமிழ் சினிமாவை சேர்த்த முக்கிய நட்சத்திரங்கள் உயிரிழந்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் பிகில், கைதி போன்ற பல்வேறு படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் அருண் அலெக்ஸாண்டர் காலமாகியுள்ள சம்பவம் திரைத்துறை பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் பல்வேறு டப்பிங் கலைஞரகள் நடிகர்களாகவும் திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் டப்பிங் கலைஞரும், நடிகருமான அருண் அலெக்ஸாண்டரும் ஒருவர். தமிழில் இவர் கோலமாவு மாநகரம், கோகிலா, பிகில், கைதி போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் பல்வேறு படங்களில் டப்பிங் கலைஞராக பணியாற்றியுள்ளார். அவ்வளவு ஏன் ஹாலிவுட்டில் வெளியான அவெஞ்சர்ஸ் படத்தின் தமிழ் வெர்ஷனில் கூட இவர் டப்பிங் பேசி இருக்கிறார்.
இதையும் பாருங்க : வீட்டுக்குள்ள இருந்து கத்தலாம்..ஆனா Sixer அடிக்கிறதோட கஷ்டம் batsmanக்கு தான் புரியும்-அனிதாவின் முதல் பதிவு.
மாநகரம், கோலமாவு கோகிலா போன்ற படங்களில் முக்கிய வில்லனாக நடித்த இவர் கைதி படத்தில் வில்லனுக்கு உளவாளியாக நடித்து இருந்தார். இவருக்கு வயது, 48. இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 28) உடற் பயிற்சி செய்துகொண்டு இருக்கும் போது திடீரென்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமாகியுள்ளார். இவரது மறைவுக்குத் திரையுலகினரும், டப்பிங் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Dint expect you’ll leave us this soon na… couldn’t control my tears…you will be irreplaceable and you’ll always live in my heart na… pic.twitter.com/TcvJNTecAr
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 28, 2020
அந்த வகையில் ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ள லோகேஷ் கனகராஜ், இவ்வளவு விரைவில் நீங்கள் விட்டுச் செல்வீர்கள் என்று நினைக்கவில்லை அண்ணா, என் கண்ணீரை அடக்க முடியவில்லை. உங்கள் இடத்தை ஈடுசெய்ய முடியாது. எப்ப்டோதும் என் மனதில் நீங்கள் வாழ்வீர்கள் என்று கூறியுள்ளார். நடிகர் அருண் அலெக்ஸாண்டர், மாஸ்டர் படத்தில் கூட நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை காணாமலேயே இவர் உயிர் பிரிந்தது தான் சோகமான விஷயம்.