இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ளது திரு உத்திரகோசமங்கை. மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற சிவன் கோவிலான மங்களநாதர், மங்களாம்பிகை கோவில் இங்கு உள்ளது.
இங்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த மரகதத்தில் ஆன நடராஜர் சன்னிதி உள்ளது. மரகதம் என்பதால் வருடம் முழுவதும் இந்த சிலை சந்தனகாப்புடனே காட்சியளிக்கும் வருடத்திற்கு ஒரு முறை மட்டும்தான் சந்தனக்காப்பு நீக்கப்பட்டு காட்சியளிக்கும்.
ஆருத்ரா தரிசனத்தன்று முதல் நாள் சந்தன காப்பு நீக்கப்பட்டு பக்தர்களுக்கு பச்சை மரகத்திலான நடராஜர் காட்சி கொடுப்பார். ஆருத்ரா அன்று அதிகாலை 3 மணியளவில் சந்தன காப்பு மீண்டும் பூசப்பட்டு விடும் பிறகு அடுத்த வருடம்தான் மரகத திருமேனியுடன் நடராஜரை பார்க்க முடியும்.
இந்த ஆண்டும் சந்தனம் களையப்பட்டு நேற்று விழா தொடங்கியது.ஆருத்ரா தரிசனமான இன்று அதிகாலை நடராஜருக்கு மீண்டும் சந்தனம் பூசப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்ட அளவில் கொண்டாடப்படும் முக்கிய விழா இதுவாகும்.