தமிழக அரசியல் நிலவரங்கள் மற்றும் பொதுவான விசயங்கள் குறித்து அதிகம் விவாதிப்பவர்களில் ஒருவர் நடிகை கஸ்தூரி. தினமும் இணைய பத்திரிக்கை செய்திகளில் கஸ்தூரியை பற்றிய செய்தி இல்லாமல் இருக்காது.
இவர் நேற்று ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்ததற்கு இவர் கூறியதாவது,
அதில், “எதிர்பார்த்ததுதான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை. கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினி அவர்களின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழவேண்டும்.” என தெரிவித்துள்ளார்.