சிவகங்கையை ஆண்டவர் வீரமங்கை வேலு நாச்சியார். இவரைப்பற்றி சிவகங்கை சீமை உள்ளிட்ட படங்களில் லேசான வரலாறு சொல்லப்பட்டிருந்தாலும், முழுமையான வரலாறு என்பது இவரைப்பற்றி இதுவரை சொல்லப்படவில்லை.
இந்நிலையில் 18 கே ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் பெரும் பொருட்செலவில் வீரமங்கை வேலுநாச்சியார் கதையை படமாக தயாரிக்கிறது – இந்தப் படத்தை ராஜேந்திரன் மணிமாறன் என்பவர் இயக்குகிறார்.
இந்நிலையில் இப்படத்தில் வீரமங்கை வேலு நாச்சியாராக நயன் தாரா நடிக்கிறார் என யாரோ கிளப்பி விட்டுள்ளார். இது செய்திகளில் வைரலாக பரவிய நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நயன்,
வேலு நாச்சியார் கதாப்பாத்திரத்தில் நான் நடிப்பதாக வெளியான தகவல் தவறானது என நடிகை நயன்தாரா பதில் அளித்துள்ளார்.