Connect with us

Entertainment

ஹன்சிகாவை தொடர்ந்து மீண்டும் முன்னாள் காதலியான நயன்தாராவுடன் இணையும் சிம்பு.

Published

on


தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது.நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர். இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார்.

சிம்பு, நயன்தாரா

இதனிடையே சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. ஆனால், அதற்குள்ளாகவே இந்த படத்தின் படப்பிடிப்பே நிறைவடைந்துவிட்டது. கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலா சரவணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஈஸ்வரன் படத்தை தெடர்ந்து கௌதம் கார்த்திக்குடன் இணைந்து .‘மஃப்டி’ என்னும் கன்னட படத்தின் தமிழ் ரீமேக்படத்தில் நடிக்கிறார் சிம்பு . கன்னடத்தில் ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக்கும், சிவராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கிறார். இந்த படத்திற்குபத்து தல என்று பெயர் வைத்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் சிம்பு, அடுத்தபடியாக இயக்குனர் ராம் படத்தில் நடிக்க இருக்கிறாராம். சமீபத்தில் இயக்குனர் ராம், சிம்புவை சந்தித்து இரண்டு கதையை சொன்னாராம்.

ராம் இயக்கத்தில் சிம்பு? | simbu next film directed by ram - hindutamil.in

பத்திரிகையில் வெளியான ஒரு சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு இந்தப் படத்துக்கான திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த ட்ராவல் கதையில் ஹீரோவோடு படம் முழுக்க ஹீரோயின் கேரக்டரும் பயணிக்குமாம். அந்த ஹீரோயின் கேரக்டருக்காக நயன்தாராவிடம் ஏற்கெனவே கதையைச் சொல்லி ஓகே வாங்கிவிட்டார் இயக்குநர் ராம். தற்போது, இந்தப் பயணக் கதைக்கு சிம்புவும் ஓகே சொல்லிவிட்டால், ‘வல்லவன்’, ‘இது நம்ம ஆளு’ படத்திற்குப் பிறகு சிம்பு – நயன்தாரா ஜோடியாக நடிக்கும் மூன்றாவது படம் இதுவாகத்தான் இருக்கும். ஏற்கனவே நடிகர் சிம்பு தனது முன்னாள் காதலியான ஹன்சிகா ‘மஹா’ படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஹன்சிகாவை தொடர்ந்து மீண்டும் முன்னாள் காதலியான நயன்தாராவுடன் இணையும் சிம்பு. appeared first on Tamil Behind Talkies.



Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *