தமிழில் உதயம், சத்யா , ரத்த சரித்திரம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராம்கோபால் வர்மா. ஹிந்தியில் ரங்கீலா உள்ளிட்ட படங்களை இயக்கிய இவரின் தாய்மொழி தெலுங்கில்தான் அதிக படங்களை இயக்கியுள்ளார்.
உண்மை சம்பவங்கள் பலவற்றை வைத்து படம் இயக்கும் ராம்கோபால் வர்மா, சர்ச்சையாக நடந்து கொள்வதில் முன்னணியில் உள்ளார்.
ஏதாவது சர்ச்சைகுரிய விசயத்தை டுவிட்டரில் போஸ்ட் போடுவதும், தனது படங்களில் வைப்பதும் இவரின் வழக்கமான செயல்களில் ஒன்று இதனால் இவர் யார் எதிர்ப்புக்கும் கவலைப்படமாட்டார்.
தற்போது அதிகமான படங்களை இவர் இயக்கி வருகிறார். அவற்றில் ஒன்றுதான் 12 ஓ க்ளாக் திரைப்படம். திகில் படமான இந்த பட ட்ரெய்லரை 12 மணிக்கு வெளியிடுகிறார் ராம்கோபால் வர்மா.