புதுவை மாநில கவர்னராக இருப்பவர் கிரண்பேடி அவர்கள். இவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அதுமட்டுமல்லாமல் டெல்லி திகார் சிறையில் தலைமை பொறுப்பு வகித்தவர். ஓய்வுக்கு பின் பாரதிய ஜனதாவில் இணைந்தார்.சில வருடங்களாக இவரை புதுவை மாநில கவர்னராக மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில் நீண்ட நாட்களாகவே புதுவையின் நாராயணசாமி அரசுக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் நீண்ட பனிப்போராகவே உள்ளது.
நாராயணசாமி ஒரு முடிவு எடுப்பதும் அந்த முடிவை கவர்னர் மறுப்பதும் என இருந்து வருகிறது. எந்த ஒரு விசயத்திலும் அரசுக்கும் கவர்னருக்கும் ஒற்றுமையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்கு கூட அரசின் கொள்கைக்கும் கிரண்பேடி விதித்த விதிமுறைகளுக்கும் முரண்பாடு இருந்தது.
இந்த நிலையில் இன்று கருத்து கூறியுள்ள நாராயணசாமி மோடியும் சரியில்லை பேடியும் சரி இல்லை என கூறி உள்ளார்.