Entertainment
Bigg Boss Promo Clash Between Aari In Rio Raj Check Out
Published
3 weeks agoon
By
admin
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.
இப்படி ஒரு நிலையில் கடந்த இரண்டு தினங்களாக ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வந்தது. நேற்று கேப்ரில்லா மற்றும் ஆஜீத் குடும்பத்தினர் வந்திருந்தனர். இதற்கெல்லாம் மேலாக ஆரியை சந்திக்க அவரது குடும்பத்தில் இருந்து ஆரியை சந்திக்க அவரது மனைவியும் மகளும் உள்ளே சென்று ஆரிக்கு இன்ப கொடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பெஸ்ட் மற்றும் சுவாரசியம் கம்மியான போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் பொது பாலாஜிக்கு ஆரிகும் சண்டை முற்றி இருந்தது.
இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில் இந்த வாரம் சுவாரஸ்யம் குறைவான போட்டியாளராக பாலா மற்றும் ஆரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. கண்ணாடி அறைக்குள் இருக்கும் ஆரியிடம் பாலா கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தார் . மேலும் இன்னொருமுறை சோம்பேறி என்ற வார்த்தையை சொன்னால் என்ன நடக்கும் என்று பாருங்கள் என்று கத்திக் கூப்பாடு போட்டு இருந்தார் பாலா.
இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஆரி மற்றும் ரியோ இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் நான் அக்கறையாக சொன்ன ஒரு விஷயத்தை கூட நீங்கள் ஏற்றுக்கொண்டது இல்லை. உங்களை தவறு சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளும் மனசு உங்களுக்கு இல்லை என்று கூறியுள்ளார் ரியோ.