திமுக இளைஞரணி தலைவராக உதயநிதி இருக்கிறார். வரும் சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்து வருகிறார். அதே போல் பாஜகவில் இணைந்துள்ள குஷ்புவும் பாஜக கூட்டங்களில் கலந்து கொண்டு அதிரடியாக பேசி வருகிறார்.
இந்நிலையில் உதயநிதிக்கு சவால் ஒன்றை குஷ்பு விடுத்துள்ளார் அதில் குஷ்பு கூறியிருப்பதாவது, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக எந்த இடம் அளித்தாலும் அதில் போட்டியிட தயார் என்னோடு திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி என்னை எதிர்த்து போட்டியிட தயாரா? என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.