முன்னாள் இந்திய கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி. அதிரடி ஆட்டக்காரரான கங்குலி கேப்டனாக இருந்தபோது இந்திய அணி பல சாதனைகளை படைத்தது. கடந்த 2003ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் 20 வருடங்களுக்கு பின் இந்திய அணியை பைனல் வரை அழைத்து சென்றது இவர் தலைமையிலான அணி.
தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கங்குலி பிசிசிஐ தலைவராக உள்ளார். இவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவரின் உடல்நலக்குறைவு சரியாக வேண்டும் என சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.