வரும் பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் ரூபாய் 2500 வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ள நிலையில் எல்லா பயன் தாரர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 15க்கும் குறைவான நாட்களே உள்ளதால் எல்லோருக்கும் 2500 ரூபாய் பொங்கலுக்குள் சென்றடையுமா என்பது சந்தேகமாக உள்ளது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த கூட்றவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பொங்கல் பண்டிகைக்குள் பரிசு வாங்க முடியாதவர்கள் அதற்கு பிறகும் ரேஷன் கடையில் வாங்கிகொள்ளலாம் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.