Entertainment
Bigg Boss Promo Will Kamal Address Balaji Murugadoss Issue
Published
2 weeks agoon
By
admin
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.
இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடைப்படையில் ஆஜீத், சோம், கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறாரகள். இந்த வாரம் ஷிவானி அல்லது ஆஜீத் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதிலும் Freeze டாஸ்க்கின் போது ஷிவானியின் அம்மாவே ஷிவானி கேம் ஆடிய லட்சணத்தை பற்றிய கூறியதை கேட்ட பின்னர் ஷிவானிக்கே தான் தான் வெளியேறிய போவதாக முடிவே செய்துவிட்டார். இந்த நிலையில் இந்த வாரம் ஆஜீத் வெளியேறி இருப்பதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.
இன்று வார இறுதி என்பதால் கமல் கண்டிப்பாக இந்த வாரம் முழுதும் நடைபெற்ற பிரச்சனைகள் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல நேற்று ஆரி மற்றும் பாலா இருவருக்கும் நடைபெற்ற பிரச்சனை குறித்து கமல் கண்டிப்பாக விசாரிப்பார் என்று எதிபார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க வாரம் முழுதும் நடைபெற்ற டாஸ்க்கின் அடிப்படையில் ஆஜீத், ரியோ, சோம் ஆகிய மூன்று பேர் சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கபபட்டனர். இவர்கள் மூவருக்கும் நடைபெற்ற கேப்டன் பதவிக்கான டாஸ்க்கில் ரியோ வெற்றி பெற்று இந்த வார தலைவராக தேர்வு செய்யப்பட்டார். எனவே, இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து இருப்பதால் ரியோ நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ஒருவேளை இன்னும் ஒரு வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி நீட்டப்படவும் வாய்ப்பு இருக்குமா என்பது தெரியவில்லை.