Entertainment
கேப்ரில்லாவை தொடர்ந்து காப்பாற்றப்பட்ட அடுத்த போட்டியாளர் – ரம்யாவுக்கா இந்த நிலை.
Published
2 weeks agoon
By
admin
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.
#BiggBossTamil இல் இன்று.. #Day91 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/6FE5YiCMm9
— Vijay Television (@vijaytelevision) January 3, 2021
இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடைப்படையில் ஆஜீத், சோம், கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறாரகள். இந்த வாரம் ஷிவானி அல்லது ஆஜீத் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதிலும் Freeze டாஸ்க்கின் போது ஷிவானியின் அம்மாவே ஷிவானி கேம் ஆடிய லட்சணத்தை பற்றிய கூறியதை கேட்ட பின்னர் ஷிவானிக்கே தான் தான் வெளியேறிய போவதாக முடிவே செய்துவிட்டார். இந்த நிலையில் இந்த வாரம் ஆஜீத் வெளியேறி இருப்பதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பாருங்க : மும்பையில் நடந்த மாஸ்டர் ப்ரோமோஷன் நிகழ்ச்சி – படு கிளாமர் ஆடையில் சென்றுள்ள மாளவிகா மோகனன்.
இன்று வார இறுதி என்பதால் கமல் கண்டிப்பாக இந்த வாரம் முழுதும் நடைபெற்ற பிரச்சனைகள் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது . அதே போல நேற்று ஆரி மற்றும் பாலா இருவருக்கும் நடைபெற்ற பிரச்சனை குறித்து கமல் விசாரித்து இருந்தார். இதில் பாலாவை வறுத்தெடுத்துவிட்டார் கமல். அதே போல ரம்யாவின் பாரபட்சமான குணம் குறித்தும் கமல் குறிப்பிட்டு இருந்தார்.
நேற்றய நிகழ்ச்சியில் கேப்ரில்லா காப்பாற்றப்பட்டு இருப்பதாக அறிவித்தார் கமல். இன்னும் ரம்யா, ஷிவானி, ஆஜீத், சோம் ஆகிய நான்கு பேர் நாமினேஷன் ரிசல்ட்டுக்காக காத்துகொண்டு இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஷிவானி காப்பாற்றப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளார் கமல். இதில் என்ன விஷயம் என்றால் இறுதியில் ரம்யா மற்றும் ஆஜீத் இருவரில் தான் யார் வெளியேற போகிறார் என்ற அறிவிப்பையே கமல் எலிமினேஷனையே அறிவித்துள்ளார்.
The post கேப்ரில்லாவை தொடர்ந்து காப்பாற்றப்பட்ட அடுத்த போட்டியாளர் – ரம்யாவுக்கா இந்த நிலை. appeared first on Tamil Behind Talkies.