Entertainment
Bigg Boss Season Ticket To Finale Task Rio And Balaji On Lead
Published
3 weeks agoon
By
admin
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது.
தற்போது ஆரி, சோம், பாலாஜி, ரியோ, ரம்யா, கேப்ரில்லா, ஷிவானி ஆகிய 7 பேர் மட்டும் மீதமிருக்கின்றனர். இதில் பாலாஜிக்கு ஒரு சிறப்பு பவர் கடந்த வாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதே போல இன்னும் கோல்டன் டிக்கெட் டாஸ்க்கும் நடைபெறாமல் தான் இருக்கிறது. அதே போல இந்த வாரம் பணப்பெட்டி சலுகை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரமான ஆரி மற்றும் பாலாஜி சண்டை தான் பரபரப்பாக சென்றது.
கடந்த சனிக்கிழமை சென்ற வாரம் ஆரி மற்றும் பாலா இருவருக்கும் நடைபெற்ற பிரச்சனை குறித்து கமல் விசாரித்து இருந்தார். இதில் பாலாவை வறுத்தெடுத்துவிட்டார் கமல். அதே போல ரம்யாவின் பாரபட்சமான குணம் குறித்தும் கமல் குறிப்பிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து நாமினேஷனில் இருந்த கேப்ரில்லா, சோம், ஷிவானி மற்றும் ரம்யா காப்பாற்றப்பட்டு ஆஜீத் வெளியானார். இப்படி ஒரு நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கி இருக்கிறது.
இது ஒருபுறம் கடந்த வாரம் முழுதும் நடைபெற்ற டாஸ்க்கின் அடிப்படையில் ஆஜீத், ரியோ, சோம் ஆகிய மூன்று பேர் சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கபபட்டனர். இவர்கள் மூவருக்கும் நடைபெற்ற கேப்டன் பதவிக்கான டாஸ்க்கில் ரியோ வெற்றி பெற்று இந்த வார தலைவராக தேர்வு செய்யப்பட்டார். எனவே, இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து இருப்பதால் ரியோ நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால், இறுதி வாரம் என்பதால் அவரும் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்.