கடந்த 1992ல் வெளியான ரோஜா படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன ஆசை பாடலின் மூலம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான். இப்படத்தின் பாடல்கள் மூலம் யார் இவர் என்று வியக்க வைத்தவர்.
அந்த படத்தோடு இவர் ஓவர் நைட்டில் பாப்புலர் ஆனதால் அந்த நேரங்களில் வெளியான மே மாதம், வண்டிச்சோலை சின்ராசு, புதிய முகம், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, காதலன், ஜெண்டில்மேன் என இரண்டு மூன்று வருடங்களில் இவர் இசையில் வெளியான இந்த படங்கள் எல்லாமே ஹிட் அடித்து பெரிய லெவலில் ரஹ்மான் உயர்ந்தார்.
ரஜினி படமான முத்து படத்துக்கு முதல் முறையாக ரஹ்மான் இசையமைத்தார். பின்பு எல்லா முன்னணி நடிகர்களின் படத்துக்கும் ஹிந்தி படங்களுக்கும் ஆங்கில படங்களுக்கும் இசையமைத்தார்.
ஆஸ்கார் விருதையும் வென்று தொட முடியாத உயரத்தில் இருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் பிறந்த நாள் இன்று .
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏ.ஆர் ரஹ்மான் சார்.
இதையும் பாருங்க
Read More