எல்லோருக்கும் பொங்கல் மகிழ்ச்சியான பண்டிகைதான் அதைவிட விஜய் மற்றும் சிம்பு ரசிகர்களுக்குத்தான் இந்த பொங்கல் தித்திக்கும் கரும்பாய் இனிக்க போகிறது. விஜய் நடிப்பில் கடந்த 8மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருக்க வேண்டிய மாஸ்டர் திரைப்படம் தற்போதுதான் வெளியாகிறது.
விஜய் ரசிகர்கள் இப்படத்தை ஆவலோடு எதிர்பார்ப்பதற்கு காரணம் , மாநகரம் படம் மூலம் கவனம் ஈர்த்து கைதியில் அதிரடி காட்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆவலுடன் உள்ளனர்.
இருப்பினும் ரசிகர்கள் ஒரு வருடமாய் கொரோனா எனும் கொடிய அரக்கனில் சிக்கி வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்த ரசிகர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு தியேட்டரில் சென்று விசில் அடித்து உற்சாகமாக படம் பார்க்க இருக்கிறார்கள்.
தயார் நிலையில் மாஸ்டர் படம் உள்ளது அதன் சென்சார் சர்ட்டிபிகேட் தற்போது வெளியாகியுள்ளது.
#MasterPongal pic.twitter.com/XY2ZOVnz2g
— Nikil Murukan (@onlynikil) January 5, 2021