Entertainment
Bigg Boss Promo Som And Rio Worried About Balaji
Published
3 weeks agoon
By
admin
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.
தற்போது ஆரி, சோம், பாலாஜி, ரியோ, ரம்யா, கேப்ரில்லா, ஷிவானி ஆகிய 7 பேர் மட்டும் மீதமிருக்கின்றனர். இதில் பாலாஜிக்கு ஒரு சிறப்பு பவர் கடந்த வாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதே போல இதுவரை துவங்கங்கப்படாமல் இருந்த கோல்டன் டிக்கெட் டாஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன் தான் துவங்கியது. கடந்த திங்கள் கிழமை நிகழ்ச்சியில் Ticket To Finale கான இரண்டு டாஸ்குகள் மட்டும் நிறைவடைந்தது.
இப்படி ஒரு நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. இதில் மூன்றாம் டாஸ்க் முடிவில் பாலாஜி முதலிடத்தையும் ரியோ கடைசி இடத்தையும் பிடித்து இருக்கிறார்கள். அதே போல நேற்று நடைபெற்ற நான்காம் டாஸ்க்கில் ஷிவானி முதல் இடத்தையும் பாலாஜி இறுதி இடத்தையும் பிடித்தனர். இறுதியாக நான்கு டாஸ்கின் இறுதியில் 20 புள்ளிகளுடன் ரம்யா பாண்டியன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அதே போல கேப்ரில்லா வெறும் 7 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இன்று 5ஆம் டாஸ்க் துவங்கப்பட இருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் பாலாஜி பற்றி சோம் மற்றும் ரியோஇருவரும் பேசுகையில் பாலாஜி பழைய பாலாஜியாக மாற வேண்டும் என்று வீட்டில் வந்தவர்கள் அனைவரும் சொன்னதால்தான் அவன் அப்படி மாறி விட்டான் என்று சோம் வருத்தப்பட்டு இருக்கிறார். இதற்கு முக்கிய காரணமேFreeze Task-ன் போது வந்த பாலாஜியின் அண்ணன் பழைய பாலாஜி ஆக மாற வேண்டும் என்று சொன்னது தான் காரணம்.