Entertainment
Chandramukhi Movie Child Artist Bhommi Latest Photo
Published
1 week agoon
By
admin
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “சந்திரமுகி” படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் வெளியான இந்த படம் தெலுகு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு மற்ற மொழிகளிலும் படு ஹிட்டானது. இயக்குனர் பி வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினியின் நண்பராக இளைய திலகம் பிரபுக்கு நடித்திருப்பார். மேலும், அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். சந்திரமுகியாக முக்கிய கதாபத்திரத்தில் நடித்த ஜோதிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டதோடு, இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

.சந்திரமுகி படத்தில் ஒரு பாடலில் ஒரு குழந்தை ‘பொம்மி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும். படத்தில் குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும் மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்த குழந்தை பொம்மி தான்.’பொம்மி’ குழந்தையின் இயற்பெயர் பிரகர்ஷிதா. இவர் சந்திரமுகி திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு நாடகங்களில் சாமியாக நடித்துள்ளார் இந்த குழந்தை. நாடகங்களில் நடித்து கொண்டே தனது கல்வியையும் தொடர்ந்த இவர் பி எஸ் சீ எலக்ட்ரானிக் மீடியா படித்தார். இப்படி ஒரு நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றிய அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி இருந்தது. அதற்கு முன்னர் இயக்குனர் வாசு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை நான் ஏற்கெனவே கன்னடத்தில் ஆப்த ரட்சகா என்ற பெயரில் இயக்கி விட்டேன். அந்தப் படம் அங்கு மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. இந்தப் படத்தின் கதையை இன்னும் மெருகேற்றி ஒரு தமிழ் ஹீரோவிடம் சொல்லி இருக்கிறேன். ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடமும் சொல்லி விட்டேன். சந்திரமுகி படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறோம்.

முதற்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன. இந்த படத்தை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார். ஆனால், இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக லாரன்ஸ் நடிக்கிறார். அதே போல இந்த இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் தொடர்ச்சி போலத்தான் இருக்கும் என்றும் கூறி இருந்தார் வாசு, ஒரு வேலை அப்படி இருந்தால் முதல் பாகத்தில் பொம்மியாக நடித்த பிரகர்ஷிதா நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.