Entertainment
Bigg Boss Ticket To Finale Task Number Seven Went In Tie
Published
2 weeks agoon
By
admin
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா ஆகிய என்று 9 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆஜீத் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.
தற்போது ஆரி, சோம், பாலாஜி, ரியோ, ரம்யா, கேப்ரில்லா, ஷிவானி ஆகிய 7 பேர் மட்டும் மீதமிருக்கின்றனர். இதில் பாலாஜிக்கு ஒரு சிறப்பு பவர் கடந்த வாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், அது என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதே போல இதுவரை துவங்கங்கப்படாமல் இருந்த கோல்டன் டிக்கெட் டாஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன் தான் துவங்கியது. கடந்த மூன்று தினங்களில் Ticket To Finale கான ஆறு டாஸ்குகள் நிறைவடைந்து உள்ளது.
இந்த ஆறு டாஸ்கின் முடிவின் படி ரியோ 29 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார் அவருக்கு அடுத்தபடியாக ரம்யா 27, ஷிவானி 26 சோம் மற்றும் பாலாஜி 25, ஆரி 20, கேபி 16 புள்ளிகளுடன் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் தற்போது லியாகி இருக்கும் ப்ரோமோவில் 7ஆம் டாஸ்க் நடைபெற்று இருக்கிறது இதில் முதல் இடத்திற்கான போட்டியில் கேபி மற்றும் பாலாஜி ஒரே நேரத்தில் முடித்து Tieயில் முடித்துள்ளார்கள்.

இதனால் யார் முதலில் முடித்து என்று மூன்றாம் நடுவர் ஆராய இருப்பதாக பிக் பாஸ் அறிவித்துவுள்ளார்.இன்னும் Ticket To Finale Taaskil ஒரு சில டாஸ்க் மட்டுமே இருக்கின்ற நிலையில் யார் வெற்றி பெறுவார் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இந்த வாரம் பணப்பெட்டி சலுகை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை யார் பெற்றுக்கொண்டு வெளியேறுவார்கள் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.