கடந்த 2018ம் ஆண்டு வெளியானது கேஜிஎஃப் படம். மிக பிரமாண்டமாக வெளியான இப்படம் பெரும் வெற்றியை பெற்றது. தென்னக மொழிகள் அனைத்திலும் வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது.
இதன் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லரை ஹிந்தி நடிகர் ஹிரிதிக் ரோஷன் பாராட்டியுள்ளார். மேலும் படத்தில் நடித்த நடிகர் யாஷுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் ரித்திக்