Entertainment
Vijay Tv Bharathi Kannamma Serial Actress Kavya Quits Serial
Published
2 weeks agoon
By
admin
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் பல கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடர் மலையாள மொழியில் ஒளிபரப்பான கருத்தமுத்து என்ற தொடரின் தழுவல் ஆகும். இந்த சீரியலில் பாரதியாக மேயாதமான் படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ரோஷினி நடிக்கிறார். இந்த சீரியலில் கதாநாயகனின் தங்கையாக அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை காவ்யா.
இதையும் பாருங்க : இறங்கி செய் அக்கானு சொன்ன – ஆரி பற்றி பேசிய ரம்யா. பூரிப்பில் அவரது தம்பி போட்ட பதிவு.
இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நடிகை காவ்யா இந்த சீரியல் மூலம் பிரபலமானார். அது மட்டுமல்லாமல் இவருக்கு தளபதி நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்துள்ளது. ஆனால், பிகில் படத்தின் வாய்ப்பை தவறவிட்டு விட்டோம் என்று பின்னர் வருத்தப்பட்டதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட தெரிவித்திருந்தார் காவ்யா அறிவுமணி.

இப்படி ஒரு நிலையில் இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை காவ்யா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மறைந்த நடிகை சித்ரா நடித்த வந்த முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவரை முல்லையாக ஏற்க ரசிகர்கள் தயங்கி வந்த நிலையில் தற்போது இவர் கொஞ்சம் கொஞ்சமாக முல்லை கதாபாத்திரத்திற்கு பொருத்தி வருகிறார்.