Connect with us

Entertainment

Actor Napoleon Brother Look Alike Him Viral Photo

Published

on


nepolean

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புதுநெல்லு புதுநாத்து என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர். நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் உள்ளனர்.

கடைசியாக இவர் தமிழில் சீமாராஜா என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் நெப்போலியன் அவர்களின் குடும்ப புகைபடம் வெளியாகியுள்ளது. அதில் நெப்போலியனை போலவே அச்சு அசலாக அவருடைய சகோதரர் உள்ளார். இதை பார்த்து பலரும் வியந்து போய் விட்டார்கள். நெப்போலியன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர் ஆவார்.

தற்போது நடிகர் நெப்போலியன் அவர்கள் ஹாலிவூட் படத்தில் நடித்து உள்ளார். அந்த ஹாலிவுட் படத்தின் பெயர் கிறித்துமஸ் கூப்பன். டேனியல் இயக்கியுள்ள இந்த படத்தில் கோர்ட்னி மேத்யூஸ், ஷீனா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக வெனிசுலா அழகி நடித்துள்ளார்.

நெப்போலியனுக்கு இது இரண்டாவது ஹாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த கூப்பன் படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார். அடுத்த அடுத்த படத்தில் நெப்போலியன் ஹீரோவானாலும் ஆச்சர்யமில்லை என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-



Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *