Tech
மனைவி மடியில் வேறொரு ஆண்; அம்பலப்படுத்திய கூகிள் மேப்ஸ்! கணவர் கண்ட காட்சி இதுதான்! | Husband sees wife cuddling with another man on Google Maps’ street view, divorces her
Published
7 days agoon
By
admin

360 டிகிரி கேமராக்களால் கைப்பற்றப்பட்ட பல்வேறு இடங்களிலிருந்து நிகழ்நேர கார்கள், பைக்குகள், விளக்குகள், போக்குவரத்து சிக்னல் விளக்குகள் ஆகியவற்றை இந்த பயன்பாடு காட்டி வருகிறது. இந்த அட்டகாசமான அம்சம் பலரின் வாழ்க்கையை எளிதாக்குகிறது, பயனர்களின் அனுபவத்தையும் சிறப்பாக்குகிறது. ஆனால், அனைவருக்கும் அனுபவம் சிறப்பாக தான் முடியும் என்று சொல்லிவிட முடியாது.

கூகிள் ஸ்ட்ரீட் வியூ பயன்பாட்டின் பயன்பாடு ஒரு மனிதனின் வாழ்க்கையை தனிப்பட்ட சோகமாக மாற்றியுள்ளது. ஸ்ட்ரீட் வியூவில் கூகிள் மேப்ஸ் மூலம் ஸ்கேன் செய்தபோது, அந்த நபர் லைவ் போட்டோவை பார்த்ததும் தடுமாறினார், காரணம் அவர் ஜூம் செய்து பார்த்த இடத்தில் அவரது மனைவி வேறொரு ஆணுடன் பழகுவதைக் வெளிப்படையாக காட்டியுள்ளது. இதை கண்டு அவர் அதிர்ந்துபோனார்.
500 கிலோ எடை;14 அடி நீளம் கொண்ட ராட்சஸ முதலை! மீண்டும் தாக்கும் என்று நம்பி மக்கள் செய்த காரியம்!

பெருவைச் சேர்ந்த கணவர், நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள ஒரு பிரபலமான பாலத்தை அடைய சிறந்த வழியை ஆராய கூகிள் மேப்ஸைப் பயன்படுத்தியுள்ளார். வெவ்வேறு வழிகளைக் கண்டறிய பயன்பாட்டில் ஸ்ட்ரீட் வியூ அம்சத்தைப் பயன்படுத்தத் தொடங்கியபோது, கூகிள் ஸ்டீட் வியூ புகைப்படங்களில் பழக்கமான ஒரு நபரின் உருவம் அவர் கண்களில் சிக்கியுள்ளது. அந்தத் நபரின் முழு தோற்றத்தை காண ஜூம் செய்து பார்த்துள்ளார்.

அவர் ஜூம் செய்து பார்த்த புகைப்படத்தில் ஒரு ஆண், நீல நிற ஜீன்ஸ் மற்றும் வெள்ளை சட்டை அணிந்து, கருப்பு மற்றும் வெள்ளை ஆடை உடுத்திய பெண்ணுடன் இருப்பதை கூகிள் ஸ்ட்ரீட் வியூ படம் காட்டியுள்ளது. அருகில் உள்ள பெஞ்சில் அந்த பெண்ணின் மடியில் இந்த ஆண் படுத்துக் கொண்டிருப்பதை காட்டியுள்ளது. திணறிப்போன கணவன் படத்தை இன்னும் ஜூம் செய்திருக்கிறார். மடியில் கிடந்த ஆணின் தலைமுடியை அந்தப் பெண் வருடிக்கொடுப்பதும் தெளிவாக தெரிந்துள்ளது.
Google Pay பயனர்கள் உஷார்! ஒரு லட்ச ரூபாய் ஆன்லைன் மோசடி- இதை மட்டும் செய்யாதீங்க!

அந்த கணவரின் மனைவி அன்று அணிந்து சென்ற அதே நிற உடையை தான் கூகிள் ஸ்ட்ரீட் புகைப்படம் காட்டியுள்ளது. படத்தில் இருந்த பெண்ணின் உடையும் ஒரே மாதிரியாக இருப்பதை வைத்து அது அவரின் மனைவி தான் என்பதை கணவர் உறுதிசெய்துள்ளார். கூகிள் மேப்ஸ் கையும்களவுமாக மனைவியின் போக்கை அம்பலப்படுத்தியதும், இவர்களின் உறவு விவாகரத்தில் சென்று முடிந்தது. விவாகரத்திற்கு முன் தனக்கும் அந்த ஆணுக்கும் பல வருடங்களாக தொடர்புள்ளது என்பதை மனைவி ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
