Business
ரிலையன்ஸ் கொடுக்க போகும் நல்ல வாய்ப்பு.. சென்செக்ஸ், நிஃப்டியையும் விஞ்சுமா? | Reliance industries can beat sensex, nifty in 3 – 5 years
Published
5 days agoon
By
admin

ரிலையன்ஸ் பங்கு ஏற்றம் காணலாம்
அதாவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்னும் சில ஆண்டுகளில் நல்ல ஏற்றத்தினை காணலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாகவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நல்ல ஏற்றத்தினை கண்டு வருகின்றது. அதோடு இனியும் நீண்ட கால நோக்கில் இன்னும் ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸின் வணிகம் விரிவாக்கம்
ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு அற்புதமான செயல்திறனை கொண்டுள்ளது. இதனால் நீண்ட கால நோக்கில் நல்ல ஏற்றத்தினைக் காணலாம், இதனால் முதலீட்டாளர்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். ரிலையன்ஸின் டிஜிட்டல் வணிகம் விரிவடைய ஆரம்பித்துள்ளது. ஆரம்பத்தில் ஒரே நேரத்தில் முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் பங்கில் குவிந்த நிலையில், பங்கு விலை சற்று அழுத்தத்தினை கண்டது.

பங்கு விலை அதிகரிக்கலாம்
ஆனால் தற்போது ரிலையன்ஸின் வணிகம் சந்தை விரிவடைந்து வருகின்றது. குறிப்பாக இந்த நிறுவனத்தில் பல முதலீடுகள் குவிந்துள்ளன. இதனால் அதன் வணிகத்தினை விரிவாக்கம் செய்ய இது உதவிகரமாக இருக்கும். இதனால் இந்த பங்கில் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் இதன் பங்கு விலையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 3 – 5 ஆண்டுகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கணிசமான லாபத்தினை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்
கொரோனா காலத்திலேயே லாக்டவுன் காரணமாக தேவைகள் முடங்கியிருந்தன. அந்த காலகட்டத்திலேயே ரிலையன்ஸ் போன்ற சில்லறை வர்த்தக நிறுவனங்கள் நல்ல லாபத்தினை கண்ட நிலையில், தற்போது லாக்டவுனில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. தேவையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டிஜிட்டல் வளர்ச்சியும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆக இதெல்லாம் ரிலையன்ஸுக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதன் பங்கு விலை அதிகரிக்கலாம் என்பது மறுப்பதற்கில்லையே.
