News
சட்டம் படிக்க ஆசையா? மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்..! | TNDALU – Tamil Nadu Dr Ambedkar Law University Admission 2019
Published
2 weeks agoon
By
admin
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் வரும் 16ம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த இளநிலை படிப்புகள் மற்றும் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கான மூன்றாண்டு சட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. தற்போது வரும் 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஐந்தாண்டு படிப்புகளான பி.ஏ.-எல்.எல்.பி., பி.காம்.-எல்.எல்.பி., பி.பி.ஏ.-எல்.எல்.பி., பிசிஏ-எல்.எல்.பி. ஆகிய நான்கு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் வரும் மே 16-ஆம் தேதி முதல் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000. தபால் மூலம் பெற கூடுதலாக ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 31 கடைசி நாளாகும்.
அதேபோன்று, மூன்றாண்டு எல்.எல்.பி. படிப்புக்கான விண்ணப்பம் ஜூன் 28ம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூலை 26 கடைசி நாளாகும்.
கட்டணம் :
சீர்மிகு சிறப்புப் பள்ளியில் வழங்கப்படும் ஹானர்ஸ் படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1000 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ. 500 ஆகும்.
12 இணைப்புக் கல்லூரி படிப்புகளில் சேர்க்கை பெறுதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500, எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ. 250 ஆகும்.
தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் கூடுதலாக ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.
இதுகுறித்தான மேலும் விவரங்களை அறிய www.tndalu.ac.in என்னும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணவும்.