Travel
ஹார்லி டேவிட்சன் சாஃப்ட்டெயில் டீலக்ஸ்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
Published
2 weeks agoon
By
admin

ஹார்லி டேவிட்சன் என்ற பெயரை கேட்டவுடன் நமக்கு அதன் கம்பீரமான என்ஜின் சத்தமும் அதன் அசத்தலான கிளாசிக் தோற்றமும் தான் மனதில் வரும். அந்த அளவிற்கு மக்கள் மனதில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் பெற்றுள்ளது. குறிப்பாக தூரமாக பைக் ரைட் செல்வோர் மற்றும் மலைகளில் பைக் ரைட் செல்பவர்கள் ஹார்லி டேவிட்சன் பைக்கினை அதிகமாக வாங்க துவங்கினர்.

சாலைகளில் பல பைக்குகள் சென்றாலும் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் தனது கம்பீரமான என்ஜின் சத்தத்தில் சாலைகளில் செல்பவர்களை ஒரு நொடி திருப்பி பார்க்க வைக்கும் என்பது குறிபிடத்தக்கது.கிளாசிக் பைக் தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது தயாரிப்பான ஹார்லி டேவிட்சன் சாஃப்ட்டெயில் டீலக்ஸ் பைக்கினை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்திய சாலைகளில் தனது சாம்ராஜியத்தை நிலைநிறுத்தும் வகையில் பெரிய தோற்றம் கொண்ட ஹார்லி டேவிட்சன் சாஃப்ட்டெயில் டீலக்ஸ் பைக்கினை நமது டிரைவ்ஸ்பார்க் குழு பெங்களூரில் உள்ள ஏரோசிட்டியில் டெஸ்ட் டிரைவ் செய்தது. இந்த அசத்தலான டீலக்ஸ் பைக்கினை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்த அனுபவத்தை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

டிசைன்:
ஹார்லி டேவிட்சன் சாஃப்ட்டெயில் டீலக்ஸ் பைக்கின் வடிவமைப்பு பார்ப்பவர்களை அசர வைக்கும் வகையில் கம்பீர தோற்றத்துடன் வடிவமைத்துள்ளது ஹார்லி டேவிட்சன் நிறுவனம். இந்த பைக் 2.4 மீட்டர் நீளத்தில் ரெட்ரோ குரூஸர் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறம் அகலமான ஹெட்லேம்ப் மற்றும் அதன் அருகே கூடுதளாக இரண்டு லேம்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் பக்கவாட்டில் 16 இன்ச் டன்லப் ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் ஸ்போக் வீல்கள் பைக்கிற்கு சிறந்த கிளாசிக் லுக்கினை தருகிறது. மேலும் இதன் வீல் மேலுள்ள மட் கார்டில் பைக்கின் வேரியண்டான டீலக்ஸ் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பில்லியன் சிங்கிள் சீட் ரைடருக்கு சொகுசான பயண அனுபவத்தை தருகிறது.

சாஃப்ட்டெயில் டீலக்ஸ் பைக்கின் பின்னால் மோனோசாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் டூயல் எக்ஸ்சாஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறப்பான என்ஜின் சத்தத்தை வெளிப்படுத்துகிறது. சாஃப்ட்டெயில் டீலக்ஸ் பைக் முழுவதும் க்ரோம் கோட்டிங் செய்யப்பட்டுள்ளது எனவே இது பைக்கிற்கு கம்பீர தோற்றத்தை தருகிறது.

என்ஜின்:
ஹார்லி டேவிட்சன் சாஃப்ட்டெயில் டீலக்ஸ் பைக்கின் என்ஜின் அமெரிக்க நாட்டின் பைக் உற்பத்தி நிறுவனமான மில்வாக்கி தயாரித்துள்ளது. இதன் சக்திவாய்ந்த 1,745 சிசி 107 வி-ட்வின் என்ஜின் அதிகபட்சமாக 86 பிஎச்பி பவரையும் 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜினில் பொருத்தப்பட்டுள்ள சிறிய ஆயில் கூலர் மூலமாக என்ஜின் குளிரூட்டப்படுகிறது.
MOST READ:ரூ.1.80 கோடி மதிப்புள்ள புத்தகம் வெளியீடு: லக்சூரி வீட்டைவிட அதிக விலை கொண்டதாக அறிமுகம்…!

சாஃப்ட்டெயில் டீலக்ஸ் பைக்கில் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள கிளட்ச் சற்று கையாள கடினமாக உள்ளது. இதனால் கியர் மாற்றும்போது சிரமாக உள்ளது. இந்த பைக் அசாத்தியமாக 190 கிமீ வேகத்தை விரைவில் எட்டக்கூடியது. இதன் என்ஜினில் வழங்கப்பட்டுள்ள டூயல் பேலன்சர்கள் பைக்கின் அதிர்வை குறைத்து சொகுசான பயண அனுபத்தை தருகிறது.

தீர்ப்பு:
இந்திய வியாபார சந்தையில் எக்ஸ் ஷோரூம் விலையில் 18.74 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஹார்லி டேவிட்சன் சாஃப்ட்டெயில் டீலக்ஸ் பைக் டிசைன் மற்றும் எஞ்சின் செயல்திறனில் சிறந்து விளங்குகிறது. க்ரோம் கோட்டிங் செய்யப்பட்ட டிசைன், மோனோசாக் சஸ்பென்ஷன், டூயல் எக்ஸ்சாஸ்ட் என பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

மேலும் அசாத்தியமாக 190 கிமீ வேகத்தை விரைவில் எட்டக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்ட இதன் சக்திவாய்ந்த 107 வி-ட்வின் என்ஜின் மற்றும் என்ஜின் அதிர்வுகளை தாங்கும் டூயல் பேலன்சர்கள் ஆகியவை ரைடருக்கு சிறந்த பயணத்தை தரும். கிளாசிக் பைக் வாங்க விரும்புவோர்க்கு இந்த சாஃப்ட்டெயில் டீலக்ஸ் பைக் சிறப்பான தேர்வாக இருக்கும்.