Connect with us

Business

2022ம் ஆண்டு தூள் கிளப்ப போகும் இந்தியா.. ரியல் ஜிடிபி 10.1% ஆக வளர்ச்சி காணலாம்..! | India’s real GDP may grow by 10.1% in FY2022

Published

on


பொருளாதார வளர்ச்சி விகிதம்

பொருளாதார வளர்ச்சி விகிதம்

நடப்பு நிதியாண்டில் கொரோனாவுக்கு மத்தியில் பொருளாதாரம் பெரும் சரிவினைக் கண்டிருந்தாலும், தற்போது கொரோனாவுக்காக தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இது நிச்சயம் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2022ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

இது பல மடங்கு வேகத்தில் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருகின்றது. முக்கிய துறைகள் வளர்ச்சி அதிகரிக்க தொடங்கியுள்ளது. தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. நுகர்வும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தற்போது கொரோணாவுக்கு முந்தைய நிலையை அடைய தொடங்கியுள்ளது.

பணவீக்கம் இலக்கு

பணவீக்கம் இலக்கு

இதன் காரணமாக வளர்ச்சி அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதோடு இந்த மதிப்பீட்டு நிறுவனம் நுகர்வோர் விலைக் குறியீடு 2022ம் நிதியாண்டில் 4.6% ஆக குறையலாம் என்றும் கணித்துள்ளது. இதே நடப்பு நிதியாண்டில் 6.4% ஆக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. அதோடு மத்திய வங்கியும் 4% ஆக இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதிபற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு

நிதிபற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு

இதே சில்லறை உணவு பணவீக்கம் 2022ம் நிதியாண்டில் 4.7% ஆக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 8% என்றும் மதிப்பிட்டுள்ளது. அதே நேரம் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் மாற்றம் இருக்காது என்றும் கணித்துள்ளது. எனினும் நடப்பு ஆண்டில் வருவாய் குறையும் என்பதால் நிதிப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 12 – 12.5% ஆக இருக்கலாம் என்றும், இதே 2022ம் நிதியாண்டில் 8.5% ஆக இருக்கலாம் என்றும் கணித்துள்ளது.



Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *