Connect with us

Entertainment

Bigg Boss Aari Issue Rakshan Apologies For His Mistake

Published

on


rakshan

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் ஆரியும் ஒருவர், நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஆரி, அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கவில்லை. இறுதியாக நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஆரம்பம் முதலே ஆரிக்கு பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட போட்டியாளர்களில் விரோதம் தான் கிடைத்தது. அது மட்டுமல்லாமல் ஆரி எப்போதும் அறிவுரை செய்து கொண்டே இருக்கிறார். மேலும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் என்று மற்ற போட்டியாளர்களை அனைவருமே இவருக்கு முத்திரை குத்தினார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்லஆரிக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்தது. மேலும், இந்த சீசனில் அதிக முறை நாமினேட் செய்யப்பட்ட ஆண் போட்டியாளர்களில் ஆரி இதன் முதல் ஆளாக இருந்து வருகிறார். இருப்பினும் இவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவால் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு தற்போது இறுதி போட்டி வரை தகுதி பெற்றுள்ளார்.

இப்படி ஒரு நிலையில் விஜய் டிவி தொகுப்பாளராக ரக்‌ஷன், ஆரி பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டு சிக்கலில் சிக்கியுள்ளார்.அதில் ஆரிக்கு தனியார் வலைத்தளங்களில் வரும் வோட்டின் விவரத்தை பதிவிட்டுள்ள ரக்ஷன், இவை எல்லாம் அதிகாரமற்ற வாக்கு எண்ணிக்கை. இது ஆரியின் Pr குழுவால் நடத்தப்பட்டு வருகிறது. இதையெல்லாம் நம்பாதீர்கள். இவை போலியானவை. இன்று 10.30 வாக்கெடுப்பு நடைபெறும் ரியோ ரசிகர்கள் தயாராக இருங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

இதை பார்த்த ஆரி ரசிகர்கள் பலரும் ரக்‌ஷன் மீது காண்டாகி அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். இப்படி ஒரு நிலையில் அந்த பதிவு குறித்து விளக்கமளித்துள்ள ரக்‌ஷன், பிக் பாஸ் பார்க்கும் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். என்னுடைய கடைசி பதிவு ஏதோ ஒரு தவறால் ஏற்பட்டுவிட்டது. எனக்கு ஒரு சிலர் கால் செய்து சொன்ன பிறகு தான் அதை கவனித்தேன். எனக்கு ஆரி அண்ணனை நன்றாக தெரியும். அவரை நான் நேரில் கூட சந்தித்து இருக்கேன். இது எந்த உள்நோக்கத்துடன் போட்டது இல்லை. அவர் வெளியில் வந்ததும் அவரை சந்திக்க காத்துக்கொண்டு இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-



Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *