Entertainment
Bigg Boss Aari Talks About Why He Leaved Ticket To Finale
Published
1 week agoon
By
admin
இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.
தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாம் சீசனில் ரித்விகா, மூன்றாம் சீசனில் முகன் என்று ஒரு ஆண், ஒரு பெண் மீண்டும் ஒரு ஆண் என்று பிக் பாஸ் டைலை வென்ற நிலையில் தற்போது இந்த சீசனில் ரம்யா, கேப்ரில்லா என்று இரண்டு பெண் போட்டியாளர்கள் இறுதி போட்டியில் இருக்கின்றனர்.
ஆனால், இவர்கள் இருவரும் டைட்டிலை வெல்ல வாய்ப்பில்லை என்பதால் இம்முறையும் ஒரு ஆண் தான் வெற்றிபெற இருக்கிறார். மேலும், இந்த சீசனில் யார் வெற்றிபெறுவார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே.
இறுதி வாரம் என்பதால் பிக் பாஸ் வீட்டில் நிச்சயம் எதாவது ஜாலியான டாஸ்க் மற்றும் கொண்டாட்டங்கள் மட்டும் தான் இருக்கும். அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸில் இருந்து ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் செல்ல இருக்கின்றனர். அந்த வகையில் அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுவிட்டனர்.