Business
காத்திருக்கும் சூப்பர் சான்ஸ்.. பிளிப்கார்டின் பிரம்மாண்ட திட்டம்..! | Flipkart plans to overseas listing as early as 2021
Published
2 weeks agoon
By
admin

பங்கு வெளியீடு எங்கு?
பிளிப்கார்டின் இந்த திட்டம் நிறைவடைந்தால், வால்மார்ட்டும் அதன் முதலீட்டினை இருமடங்காக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட் அதன் பங்கு வெளியீட்டிற்கான சிங்கப்பூர் அல்லது அமெரிக்காவினை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பிளிப்கார்ட் சிங்கப்பூரில் நிறுவப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வால்மார்ட்
ஆனால் அதன் பெற்றோர் நிறுவனமான வால்மார்ட் அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. பிளிப்கார்ட் அமெரிக்காவில் பட்டியலிடப்பட்டால், இது பெரும் நிதியினை திரட்டலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்து பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் வெளியாகவில்லை.

விரைவில் வெளியாகலாம்
எனினும் இது குறித்தான நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகள் நடந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதனை விரைவில் செயல்படுத்த இந்த நிறுவனம் ஆலோசகர்களை நிறுவியுள்ளதாகவும் தெரிகிறது. இன்னும் சில தகவல்கள் இது குறித்தான அனுமதிக்காக பங்கு சந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பொது பங்கு வெளியீடு
ஆக மொத்தத்தில் இந்த 2021ம் ஆண்டு இறுதிக்குள் இந்த பொது பங்கு வெளியீடு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லை என்றாலும் 2022ம் ஆண்டின் இறுதியிலும் இந்த பங்கு வெளியீடு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் இந்த நெருக்கடியான நேரத்தில் கொஞ்சம் இது போன்ற திட்டங்கள் கொஞ்சம் தாமதமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு விகிதம்
பிளிப்கார்ட் நிறுவனத்தின் சுமார் 77 சதவீதம் பங்குகளை வால்மார்ட் நிறுவனம், 16 பில்லியன் டாலருக்கு கடந்த 2018ல் கைபற்றியுள்ளது. இந்த முதலீடு இந்தியாவின் மிகப்பெரிய ஒற்றை அன்னிய நேரடி முதலீடாகும்.
இந்தியாவின் முன்னணியில் உள்ள வெற்றிகரமான ஸ்டார்டப் நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்டின் நிறுவனர்கள், சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆவர்.