1920×1080 பிக்சல் திர்மானம்
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் மாடலில் 13.3-இன்ச் QLED டிஸ்ப்ளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, மேலும் 1920×1080 பிக்சல் திர்மானம் மற்றும் மெல்லிய பெசல், எடை குறைந்த வடிவமைப்பு ஆதரவு கொண்டுள்ளது.
உறுதியான அலுமினியம் ஃபிரேம்
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா மாடலில் கூர்மையான டைமண்ட் கட் எட்ஜ் மற்றும் உறுதியான அலுமினியம் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
புதிய போனிற்கு வாட்ஸ்அப் சாட்களை மாற்றம் செய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!
ரேம் வசதி
கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா லேப்டாப் மாடலில் 8 ஜி.பி. / 12 ஜி.பி. DDR4 ரேம் வசதி மற்றும் 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கு வசதியும் இவற்றுள் அடக்கம்.
720பிக்சல் ஹெச்.டி. கேமரா
மேலும் இந்த சாதனத்தில் 720பிக்சல் ஹெச்.டி. கேமரா, டூயல் அரே டிஜிட்டல் மைக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (1.5 W x 2) ஆதரவுகளும் உள்ளது. குறிப்பாக ஆக்டிவ் பெண் வசதி மற்றும் கைரேகை சென்சார் போன்றவை இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
17.5 மணி நேர பேட்டரி பேக்கப்
கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா லேப்டாப் சாதனத்தில் வைபை 6 (Gig+), 802.11ax 2×2, யு.எஸ்.பி.-சி, 2 x யு.எஸ்.பி. 3.0, எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் 57வாட் பேட்டரி இவற்றுள் அடக்கம் என்றும் 17.5 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில்
குறிப்பாக கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா லேப்டாப் ராயல் சில்வர் நிறத்தில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விலை 829.99டாலர்கள் என ( இந்திய மதிப்பில் ரூ.59,411) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனத்தின் விற்பனை துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.