Connect with us

Travel

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்… ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்…

Published

on

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

தென் கொரிய நாட்டு மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான கியா, இந்தியாவில் அமோகமான வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிறுவனம் அறிமுகம் செய்த செல்டோஸ் மற்றும் கார்னிவல் ஆகிய இரு கார்களும் எதிர்பாராத வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதிலும், செல்டோஸ் எஸ்யூவி ரக காருக்கு கிடைத்து வரும் வரவேற்பு நம்ப முடியாத வகையில் இருக்கின்றது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் இந்தியாவின் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக கியாவை செல்டோஸ் எஸ்யூவி ரக காரே உயர்த்தியிருக்கின்றது. இந்த சாதகமான சூழ்நிலையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் விதமாக மேலும் பல புதிய மாடல்களை இந்தியாவில் களமிறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, இந்தியாவிற்கான மூன்றாம் மாடலாக சொனெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இக்காரை ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள அனந்த்பூர் உற்பத்தி ஆலையில் வைத்தே கியா நிறுவனம் தயாரித்து வருகின்றது. இங்கிருந்துதான் நாடு முழுவதிற்கும் சொனெட் எஸ்யூவி கார்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்தவகையில், இங்கு தயாரிக்கப்பட்ட கியா சொனெட் எஸ்யூவி கார்கள் அண்மையில்தான் டீலர்களின் ஷோரூம்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டன.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இந்த கார் ஓர் சப்-4 மீட்டர் ரக காம்பேக்ட் எஸ்யூவி ஆகும். இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இக்கார் இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இந்த கார் செயல் திறன் மற்றும் ஸ்டைல் என அனைத்திலும் செம்ம டஃப் கொடுக்கின்ற வகையில் உருவாகியுள்ளது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இதுமட்டுமின்றி ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பிரீமியம் அம்சங்களும் இக்காரில் கூடுதலாக இடம்பெற்றிருக்கின்றன. எனவேதான் விற்பனைக்கான அறிமுகத்திற்கு முன்னரே கியா சொனெட் பலரைக் கவர்ந்து வருகின்றது. வெகு விரைவில் இக்கார் விற்பனைக்கான அறிமுகத்தை வழங்க இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையில், கியா சொனெட் காரை இயக்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவினருக்கு கிடைத்தது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இந்த அனுபவத்தின் மூலம் கிடைத்த சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். அதாவது, முதல் இயக்கத்தின் (First Drive) மூலம் கார் பற்றி நாங்கள் அறித்துகொண்ட சாதக, பாதங்களைதான் இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

வடிவமைப்பு மற்றும் ஸ்டைல்

2020ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் கியா சொனெட் காரை எப்படி காட்சிப்படுத்தியதோ அதோ தோற்றத்தில் விற்பனைக்கான மாடலையும் கியா நிறுவனம் தயார் செய்துள்ளது. அதாவது, ஒரு சில மாற்றங்களை மட்டுமே அக்காரில் கியா செய்திருக்கின்றது. சொனெட்டை கூடுதல் கவர்ச்சியாக்கும் முயற்சியில் இந்த மாற்றங்களை அது செய்திருக்கின்றது. மிக போல்டான மற்றும் ஆக்ரோஷமான வடிவமைப்பு அக்காருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

அதுமட்டுமின்றி லேசான ஸ்போர்ட்டி லுக்கும் கியா சொனெட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக என்னென்ன அம்சங்களை எல்லாம் கியா நிறுவனம், சொனெட்டிற்காக வழங்கியிருக்கின்றது என்பதை முதலில் பார்க்கலாம்.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

முகப்பு பகுதியில் புலியின் மூக்கைப் போன்ற கிரில் பொருத்தப்பட்டுள்ளது. இது புதிய கிளாஸ் நிற பூச்சில் காணப்படுகின்றது. இந்த கிரில்லை கூடுதலாக சிறப்பிக்கும் விதமாக சிவப்பு நிற அக்ஸெண்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது சொனெட்டின் வேரியண்டை குறிக்கும் வகையில் ‘ஜிடி லைன்’ என்ற பேட்ஜைக் கொண்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, கிரில்லைச் சுற்றிலும் குரோம் பூச்சு கொண்ட நர்ல்டும் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இதேபோன்று முகப்பு பகுதியில் கவனிக்க வேண்டிய தகவல்கள் மிக ஏரளமாக உள்ளன. அதில் ஒன்றே மின் விளக்குகள். இக்காருக்கு ஷார்ப்பான தோற்றத்தை வழங்கும் வகையில் ஹெட்லைட் காட்சியளிக்கின்றது. இது கிரீடம் போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதே இதற்கு காரணம் உள்ளது. இத்துடன், இந்த ஹெட்லேம்பைச் சுற்றி எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது ஹெட்லேம்பிற்கு கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்குகின்றது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இதேபோன்று, காரின் எஞ்ஜின் பகுதிக்குள் அதிகளவில் காற்றைக் கடத்தும் வகையில் மிகப்பெரிய அளவில் ஏர் இன்டேக்கர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கு மிக அருகில்தான் இரு பனி விளக்குகள் நிலைக் கொண்டுள்ளன. இவை அடர் இருட்டு மற்றும் பனி காலத்தில் தெளிவான பார்வையை வழங்க உதவும். இந்த ஏர் இன்டேக்கர்களைச் சுற்றியும்கூட சில்வர் நிற உறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த சில்வர் நிற உறுப்பானது அப்படியே நீண்டு சென்று ஸ்கிட் பிளேட்டாக அடிப்பகுதியில் நிலைக் கொள்கின்றது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

காரின் முன் பக்கத்தில் செய்யப்பட்டிருப்பதைப் போலவே பக்கவாட்டு பகுதியிலும் குறிப்பிட்ட பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய இடத்தில் ட்யூவல் டோன் அலாய் வீல்கள் இருக்கின்றன. இது 16 இன்சுடைய கிரிஸ்டல் கட் வீலாகும். இது சற்று பெரிய உருவத்தில் காணப்படுகின்றது. இத்துடன், கருப்பு நிற கிளாடிங்கும் பக்கவாட்டு பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இவையனைத்தும் சேர்ந்தே கியா சொனெட்டிற்கு ஸ்போர்ட்டி லுக்கை வழங்குகின்றன. இந்த கருப்பு நிற கிளாடிங்குகள் வீல்களின் ஆர்ச்சுகளில் பொருத்தப்பட்டிருக்கின்றன. தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் ஜிடி லைனுடையது என்பதால் கூடுதலாக சிவப்பு நிற அக்ஸென்டுகளை காண முடிகின்றது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இவை மட்டுமின்றி பக்கவாட்டு பகுதியில் கவனிக்க வேண்டிய விஷயமாக காரின் தூண்கள் இருக்கின்றன. இது கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றது. இத்துடன், கண்ணாடி சுற்றிலும் குரோம் பூச்சுக் கொண்ட ஸ்டிரைப் மற்றும் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இக்காரின் ‘சி’ பிள்ளருக்கு காரின் உடற்பகுதிக்கு என்ன நிறம் வழங்கப்பட்டிருக்கின்றதோ, அதே நிறம்தான் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

எனவே, கியா நிறுவனம் சொனெட்டின் அனைத்து விஷயத்திலும் கவனத்தைச் செலுத்தியிருப்பது நமக்கு தெளிவாக தெரிகின்றது. இதேபோன்று பின் பக்கத்தைக் கண்கானிக்க உதவும் ஓஆர்விஎம்-களுக்கும் உடல்பகுதியின் நிறமே வழங்கப்படுகின்றது. இந்த கண்ணாடிகளை மின்சார எந்திரத்தின் உதவியாலேயே கட்டுப்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த ஓர்விஎம்களில்தான் டர்ன் இன்டிகேட்டர் மின் விளக்குகள் இடம்பெற செய்யப்பட்டிருக்கின்றன.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

சரி வாருங்கள் அடுத்ததாக காரின் பின் பகுதிக்கு செல்லலாம். கியா சொனெட் காரின் பின் பகுதியில் ஹார்ட்பீட் வடிவத்திலான மின் விளக்குகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த டெயில் மின் விளக்குகளுடன் எதிரொளிக்கும் ஸ்டிக்கர்களும் ஒட்டப்படுகின்றன. இது காரை எளிதில் இனம் காண உதவும். இதன் பூட் லிட்டில் ‘சொனெட்’ பேட்ஜ் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு இந்த ஸ்டிக்கர் மட்டுமின்றி காரின் டிரிம்மை உறுதிப்படுத்தும் பேட்ஜ்கள் வழங்கப்படுகின்றன.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இதேபோன்று, பின் பகுதியில் ரசிக்கக் கூடிய மற்றுமொரு விஷயமாக ஸ்பாய்லர் உள்ளது. காரின் மேற்கூரைப் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. இது ஸ்டாப் மின் விளக்குடன் இருப்பது கூடுதல் சிறப்பானதாக உள்ளது. தொடர்ந்து, சொனெட்டின் பின்புற பம்பரின் இரு முனைகளிலும் ஒரு ஜோடி பிரதிபலிப்பான்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி இன்னும் பல ஏராளமான விஷயங்கள் காரின் பின் பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் சேர்ந்து கியா சொனெட்டிற்கு கவர்ச்சியான வெளிப்புற தோற்றத்தை வழங்குகின்றன.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

காரின் உட்புறம்

கியா சொனெட்டின் வெளிப்பகுதி எப்படி நம்மை கவரும் வகையில் உள்ளதோ, அதைக் காட்டிலும் பல மடங்கு கூடுதல் கவருதலை உட்பகுதி வழங்குகின்றது. இக்காரின் டிரைவர் இருக்கை ஓர் நபர் அடையும்போது, மிக எளிதில் காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைக் காண முடியும். செவ்வக வடிவத்தில் காணப்படும் இந்த சாதனத்திற்குமிக அருகிலேயே இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் இருப்பதால் அதையும் நம்மால் எளிதில் காண முடிகின்றது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இவையிரண்டும் சேர்ந்து காரின் டேஷ்போர்டின் பாதி இடத்தை ஆக்கிரமித்திருப்பு செய்திருக்கின்றன. மிக தெளிவான பார்வை மற்றும் வசதியை வழங்கும் விதமாக இவை பெரியளவில் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன், எந்தவொரு கடினமான உணர்வையும் வழங்காத வகையில் மென்மையான தொடு பொருட்கள் முன் பக்க இருக்கையாளர்களை நோக்கி வழங்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் சேர்ந்து சொனெட்டிற்கு பிரீமியம் தோற்றத்தை எந்தவொரு சந்தேகமுமின்றி வழங்குகின்றன.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இவற்றைப் போலவே காரின் உட்பகுதியில் கவனிக்க வேண்டிய விஷயமாக ஸ்டியரிங் வீல் இருக்கின்றது. இது மூன்று ஸ்போக் வீல் அமைப்பைக் கொண்டிருக்கின்றது. இந்த ஸ்டியரிங் வீலிலும் சில்வர் அக்ஸென்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், ஜிடி லைன் என குறிப்பிடும் பேட்ஜ் இதிலும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, மின் விளக்கு, ஹாரன், ஆடியோ கன்ட்ரோல், அழைப்புகளை ஏற்றல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு பொத்தான்களும் அதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

மேலும், க்ரூஸ் கன்ட்ரோல், டிரைவர் அசிஸ்ட் அம்சம் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரைக் கட்டுப்படுத்தும் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரைப் பற்றி மிக தெளிவாக பார்ப்போமேயானால், இது 4.2 இன்ச் கொண்ட திரையாகும். இதில் ஸ்பீடோ மீட்டர், டாக்கோ மீட்டர், எரிபொருள் அளவு மற்றும் வெப்பமானி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

தொடுதிரை இன்ஃபோடெயின்மென் சிஸ்டம், இது 10.25 இன்ச் அளவு கொண்டதாகும். இதிலும் ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நேவிகேஷன், செல்போன் இணைப்பு, ப்ளூடூத் இணைப்பு, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, யுவிஓ இணைப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இதில், யுவிஓ இணைப்பு வசதி மூலம் காருக்குள் இருக்கும் 57 சிறப்பு கருவிகளை நம்மால் மிக சுலபமாக கன்ட்ரோல் செய்ய முடியும். செல்போன் செயலி மூலமே இது சாத்தியமாகும். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் செல்போன் செயலியைப் பயன்படுத்தி குரல் கட்டளை மூலமாகவும் அந்த அம்சங்களைக் கட்டுப்படுத்த முடியும். குறிப்பிட்டு கூற வேண்டுமானால் செயலிப் பயன்படுத்தி காரை ஆன்/ஆஃப் செய்தல், நேரடியாக டிராக் செய்தல், வாகனத்தின் நிலையைக் கண்டறிதல் மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் செய்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

செல்போன் செயலி மூலமாக மட்டுமின்றி ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவும் மேலே குறிப்பிட்ட அம்சங்களைக் கட்டுப்படுத்தும் தேர்வையும் கியா நிறுவனம் வழங்க இருக்கின்றது.

இந்த காரின் முக்கியமான ஏசி வெண்ட், இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டருக்கு கீழாக இடம்பெற்றிருக்கின்றது. இது முட்டை வடிவில் காணப்படுகின்றது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

சொனெட்டில் தானியங்கி கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இது சொனெட்டில் கிடைக்கக்கூடிய ஸ்டாண்டர்டு வசதியாகும். இதனை மேனுவலாகவும் கட்டுப்படுத்த முடியும். தொடர்ந்து, பன்முக ஓட்டும் வசதியும் சொனெட்டில் வழங்கப்பட்டிருக்கின்றது. அதாவது, பனி, மண் மற்றும் மணல் ஆகிய மூன்று விதமான டிரைவிங் மோட்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதனை அனைத்து விதமான சாலைகளையும் சமாளிப்பதற்காக கியா வழங்கியுள்ளது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இத்துடன், ஒயல்லெஸ் சார்ஜிங், 12வோல்ட் திறனுடைய யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்டவையும் சொனெட்டில் வழங்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்களைப் போலவே சொனெட்டின் இருக்கைகளும் கவரக்கூடியதாக உள்ளது. முழுக்க முழுக்க பிரீமியம் வசதியைக் கருத்தில் கொண்டு இக்கார் உருவாக்கப்பட்டிருப்பதால், மிருதுவான கருப்பு நிற லெதர் போர்வை அனைத்து இருக்கைகளுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

ஆனால், ஆரம்ப நிலை வேரியண்டுகளில் துணி உறைகள்தான் காணப்படுகின்றன. மேலும், இந்த உறைகளிலும் ஜிடி லைனைக் குறிப்பிடும் எழுத்துகள் அச்சிடப்பட்டிருக்கின்றன. அதேசமயம், பின்னிருக்கைகளைக் காட்டிலும் முன்னிருக்கைகள் கூடுதல் ஸ்பாஞ்சு தன்மையைக் கொண்டதாக இருக்கின்றது. சொனெட்டை இயக்கும் நபர் எந்தவொரு இடையூறையும் உணரக்கூடாது என்பதற்காகவே இந்த வசதி வழங்கப்பட்டிருக்கின்றது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இதில் கவலையளிக்கக்கூடிய தகவல் என்னவென்றால் கியா நிறுவனம் எலெக்டிரிக்கலாக அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய வசதியை எந்தவொரு இருக்கைக்கும் வழங்கவில்லை. ஆரம்பநிலை வேரியண்ட் முதல் டாப் வேரியண்ட் வரை இந்த நிலைதான் உள்ளது. எனவே, இருக்கைகளை மேனுவலாக மட்டுமே மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை இதில் காணப்படுகின்றது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

சரி வாருங்கள் பின் இருக்கை பக்கம் போகலாம். பின்னிருக்கையில் இருவர் மட்டும் அமர்ந்தால் அதிக சொகுசான பயண அனுபவத்தை அனுபவிக்க முடியும். மாறாக, மூவர் அமர்ந்து சென்றால் லேசான அசௌகரியத்தை அவர்கள் பெறுவார்கள். அதேசமயம், அதிக உயரமானவர்கள் இக்காரில் பயணித்தால்கூட கால் மற்றும் தலைப் பகுதிக்கு நல்ல இடைவெளி கிடைக்கும் வகையில் உட்பகுதி காட்சியளிக்கின்றது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

மேலும், இருவர் மட்டுமே அமர்ந்து பயணிப்பார்கள் என்றால், அவர்களின் கைகளுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் ஹார்ம் ரெஸ்ட் மற்றும் கப் ஹோல்டர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், கூடுதல் சொகுசான அனுபவத்தை வழங்கும் வகையில் தனி ஏசி வெண்டுகள், யுஎஸ்பி போர்ட், ஸ்டோரேஜ் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், கேபினுக்குள் தூய்மையான காற்றிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர் கருவியும் இடம்பெற செய்யப்பட்டிருக்கின்றது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இந்த அம்சங்களைப் போன்றே எலெக்ட்ரிக் சன் ரூஃப் வசதியும் கியா சொனெட்டில் வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயங்களைப் போன்றே கியா சோனெட்டின் ஸ்டோரேஜ் வசதியும் சிறப்பானதாக உள்ளது. இக்காரின் லக்கேஜ் திறன் 392 லிட்டராக உள்ளது. பின்னிருக்கை லேசாக அட்ஜெஸ்ட் செய்வதன் மூலம் இதனை கூடுதலாக்கிக் கொள்ள முடியும்.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...
Length (mm) 3995
Width (mm) 1790
Height (mm) 1642
Wheelbase (mm) 2500
Boot Space (Litres) 392
டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

மாறுபாடுகள், முக்கிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு

கியா சொனெட் அதன் உடன்பிறப்பான செல்டோஸ் காரைப் போன்றே பரந்த அளவிலான வசதிகளைக் கொண்டிருக்கின்றது. மேற்கூறிய அம்சங்களே அதற்கு சான்றாக உள்ளது. இதேபோன்றே பாதுகாப்பு மற்றும் பிற வசதிகளிலும் செல்டோஸை ஒத்தவாறு சொனெட் உள்ளது. இக்கார், டெக் லைன் மற்றும் ஜிடி லைன் எனும் விதமான ட்ரிம்களில் கிடைக்க உள்ளது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இவ்விரு ட்ரிம்களும் ஆறு விதமான வேரியண்டுகளில் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, HTE, HTK, HTK+, HTX, HTX+ மற்றும் GTX+ ஆகும். இவற்றில் காணப்படும் வசதிகளை பட்டியலாக கீழே காணலாம். கீழே காணவிருப்பது ஸ்டாண்டர்டு வசதியாகும். ஆகையால், அனைத்து விதமான ட்ரிம் மற்றும் வேரியண்டுகளில் இதை நம்மால் காண முடியும்.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

கிரீடம் அமைப்புடைய ஹெட்லேம்ப்

ஹார்ட்பீட் எல்இடி டெயில் லைட்

16 அங்குல ‘கிரிஸ்டல்-கட்’ ட்யூவல் டோன் அலாய் வீல்கள்

எல்இடி டிஆர்எல் மற்றும் மூடுபனி விளக்குகள்

10.25 அங்குல தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

4.2 அங்குல இன்ஸ்ட்ரூமெண்ட் திரை

காற்றோட்டமான இருக்கைகள்

7-ஸ்பீக்கர் போஸ் ஆடியோ சிஸ்டம்

ஒயர்லெஸ் சார்ஜிங்

டிராக்ஷன் கன்ட்ரோல் மோட்கள்

டிரைவிங் மோட்கள்

மின்சார சன்ரூஃப்

பின்புற ஏசி வென்ட்கள்

வைரஸ் பாதுகாப்புடன் ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர்

மின்சாரத்தால் மடிக்கக்கூடிய மற்றும் சரிசெய்யக்கூடிய ஓஆர்விஎம்-கள்

லெதர் இருக்கைகள்

ஏடி-கட் ஸ்டீயரிங் வீல்

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

கியா சொனெட்டில் இடம்பெற்றிருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள்:

ஆறு ஏர்பேக்குகள்

ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ்

வாகன ஸ்திரத்தன்மை மேலாண்மை (வி.எஸ்.எம்)

மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு (ESC)

பிரேக் அசிஸ்ட்

அவசர நிறுத்த சமிக்ஞை

தாக்கத்தை உணரும் ஆட்டோ கதவு திறத்தல்

ஆட்டோ டூர் லாக்

முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள்

வழிகாட்டுதல்களுடன் ரியர்வியூ பார்க்கிங் கேமரா

க்ரூஸ் கன்ட்ரோல்

டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு

ஐசோபிக்ஸ் குழந்தை இருக்கை ஆங்கர்கள்

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

டிரைவிங் இம்பிரெஷ்ஷன் மற்றும் செயல்திறன்

கியா சொனெட் மூன்று விதமான எஞ்ஜின் தேர்வைக் கொண்டுள்ளது. 1.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் எஞ்ஜன் இது முதல் தேர்வாகும். இது அதிகபட்சமாக 83 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இது, 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் யூனிட் உள்ளது. இது அதிகபட்சமாக 120 பிஎச்பி மற்றும் 172 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இந்த எஞ்ஜினில் புதிய வசதியாக 6ஸ்பீடு ஐஎம்டி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனை இன்டெல்லிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் என குறிப்பிடப்படுகின்றது. இது அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆப்ஷனும் இதில் கிடைக்க இருக்கின்றது. இதேபோன்று, 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்ஜின் தேர்வும் இக்காரில் வழங்கப்பட இருக்கின்றது. இது 110 பிஎச்பி அல்லது 115 பிஎச்பி வெளிப்பாடுகளுடன் கிடைக்க இருக்கின்றது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இதில் நம் டிரைவ்ஸ்பார்க் குழு பெட்ரோல் மற்று்ம டீசல் எஞ்ஜின் தேர்வுள்ள வாகனங்களை இயக்கி பார்த்தது. அதாவது, ஜிடிஎக்ஸ்+ வேரியண்டை இயக்கி பார்த்தோம். இது மிகவும் அலாதியான அனுபவத்தை வழங்கியது. இந்த கார் அதிகபட்சமாக 115பிஎச்பி திறனை வெளிப்படுத்தியது. இதேபோன்று, 1.5 லிட்டர் எஞ்ஜினைக் கொண்ட சொனெட் 120 பிஎச்பி வெளியேற்றியது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

ஒட்டுமொத்த கையாளுதல் (திசைமாற்றி, இடைநீக்கம் மற்றும் பிரேக்குகள்)

கியா சொனெட் மிகவும் சீரான கார் என்ற உணர்வை வழங்குகின்றது. இந்த காரின் ஸ்டியரிங் வீல் மிகவும் இலகுவானதாக உள்ளது. இது நகரத்திற்குள் பயன்படுத்துவதாக ஏதுவாக உள்ளது. அதேசமயம், நெடுஞ்சாலையில் இயக்கும்போது மிகவும் அலாதியான உணர்வை வழங்குகின்றது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இதன் உருவம் கச்சிதமாக இருப்பதால் குறுகிய பாதைக்குள் திருப்புவது கூட மிகவும் சுலபமாக உள்ளது. குறிப்பாக, உடனடி மாற்றத்தை இதன்மூலம் நம்மால் பெற முடிகிறது. மேலும், கார் எல்லா நேரங்களிலும் மிகவும் நிலையானதாக இது உணர வைக்கின்றது. குறிப்பாக இதன் டயர்கள் ஈரமான மற்றும் வறண்ட நிலையில் உள்ள சாலைகளில்கூட நல்ல பிடிமானததை வழங்குகின்றது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இதேபோன்று கியா சொனெட்டின் சஸ்பென்ஷன் மிகவும் சிறப்பானதாக இருக்கின்றது. சீரற்ற சாலைகளைக்கூட சுலபமாக கடக்க அது உதவுகின்றது. குறிப்பாக, பெரிய குழிகள் அல்லது வேக தடைகள் மீது வாகனம் ஓட்டும்போதுகூட இதை உணர முடிகிறது. கியா சோனட்டின் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுகின்றன. இது உடனடி பிரேக் மற்றும் பாதுகாப்பான உணர்வை வழங்குகின்றது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...
Specs 1.2-Litre Petrol 1.0-Litre T-GDI Petrol 1.5-Litre CRDi Diesel
Displacement (cc) 1,197 998 1,493
Power (bhp) 83 120 110/115
Torque (Nm) 115 172 240/250
Transmission 5MT 6iMT/7DCT 6MT/6AT
டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

விலை, நிறங்கள் மற்றும் கிடைக்கும் தன்மை

கியா சொனெட் எஸ்யூவி இந்திய சந்தையில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. விரைவில் இது விற்பனைக்கான அறிமுகத்தைப் பெறவிருக்கின்றது. இந்த மாத இறுதிக்குள் இது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்காருக்கான விலை இன்னும் வெளியிடப்படவில்லை. அதன் போட்டியாளர்களைக் கருத்தில் கொண்டு ரூ. 8 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

கியா மோட்டார்ஸ் சமீபத்தில்தான் இக்காருக்கான புக்கிங்கை ஏற்கத் தொடங்கியது. ரூ. 25,000 முன் தொகையுடன் முன்பதிவுகளை ஏற்கப்பட்டு வருகின்றது. வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலோ அல்லது டீலர்களை நேரடியாக தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்யலாம். எஸ்யூவி விற்பனைக்கு வந்தவுடன் கியா சொனெட்டுக்கான டெலிவரிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதும், வாடிக்கையாளர்கள் எஸ்யூவியை வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். இக்கார் துல்லியமாக 11 நிறத் தேர்வில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் எட்டு மோனோ-டோன் பெயிண்ட் திட்டத்தில் கிடைக்க இருக்கின்றன. அவை, இன்டென்ஸ் ரெட், பீஜ் கோல்ட், அரோரா பிளாக் பேர்ல், கிராவிட்டி கிரே, ஸ்டீல் சில்வர், இன்டலிஜென்ஸ் ப்ளூ, பனிப்பாறை வெள்ளை முத்து மற்றும் தெளிவான வெள்ளை ஆகியைவை ஆகும்.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

இதேபோன்று ட்யூவல் டோன் நிற தேர்வும் உள்ளன. இன்டென்ஸ் ரெட் / அரோரா பிளாக் பேர்ல், பீஜ் கோல்ட் / அரோரா பிளாக் முத்து மற்றும் பனிப்பாறை வெள்ளை முத்து / அரோரா கருப்பு முத்து.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

போட்டியாளர்கள்

கியா சொனெட் இந்தியாவில் பல நிறுவனத்தின் முக்கிய மாடல்களுக்கு போட்டியாக அமர இருக்கின்றது. இந்தியாவில் சப்-4 மீட்டர் ரக காருக்கு எக்கசக்க டிமாண்ட் நிலவி வருகின்றது. இந்த டிமாண்டை பூர்த்தி செய்யும் விதமாக மாருதி சுசுகி விட்டார பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட கார்கள் விற்பனையில் இருக்கின்றன.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...

மேற்கூறிய அனைத்து மாடல்களுக்குமே கியா சொனெட் கடுமையான போட்டியை வழங்க இருக்கின்றது. அறிமுகத்தைத் தொடர்ந்து விரைவில் இந்தியர்களின் கைகளில் இக்கார் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றது. ஏற்கனவே இந்நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவி வருகையால் பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள்கூட ஓரங்கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதுமுக காரான சொனெட் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டாடா நெக்ஸானை கதற விட தயாராகும் கியா சொனெட்... ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்...
Model/Specs Kia Sonet Maruti Suzuki Vitara Brezza Hyundai Venue
Engine 1.5-litre Diesel 1.5-litre Petrol 1.5-litre Diesel
Power (bhp) 110/115 104 100
Torque (Nm) 240/250 138 240
Transmission 6MT/6AT 5MT/4AT 6MT

Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *