Connect with us

Tech

பட்ஜெட் விலையில் சியோமி மி நோட்புக் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்.! | Xiaomi Mi Notebook 14 e-learning edition Launched: Specs, Features and More

Published

on


சேசிஸ் மெல்லிய

மேலும் இந்த நோட்புக் மெட்டல் சேசிஸ் மெல்லிய யுனிபாடி கொண்டிருக்கிறது. பின்பு இதில் பிரிண்ட் செய்யப்பட்ட கீ டெக்ஸ்ட் மற்றும் சிசர்-ஸ்விட்ச் கீபோர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதில் பிரத்யேக நம்பர் பேட் வழங்கப்படவில்லை.

1920x1080 பிக்சல் தீர்மானம்

சியோமி மி நோட்புக் 14 இ லெர்னிங் மாடல் ஆனது 14-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1920×1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

3 புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.! நம்பமுடியாத வேலிடிட்டி.!

எதிர்பார்த்த 2.1 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல்

இந்த சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த 2.1 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3-10110யு பிராசஸர் வசதி மற்றும் இன்டெல் UHD கிராபிக்ஸ் 620 வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விண்டோஸ் 10 ஹோம்

சியோமி மி நோட்புக் 14 இ லெர்னிங் மாடலில் 8ஜிபி DDR4 2666MHz ரேம் மற்றும் 256ஜிபி SATA எஸ்எஸ்டி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு விண்டோஸ் 10 ஹோம் எடிஷன் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

புதிய சாதனத்தில் 46 வாட் பேட்டரி

இந்த புதிய சாதனத்தில் 46 வாட் பேட்டரி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 65 வாட் அடாப்டர் உடன் வெளிவந்துள்ளது இந்த மி நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன்.

4 இ லெர்னிங் மாடல் ஆனது

சியோமி மி நோட்புக் 14 இ லெர்னிங் மாடல் ஆனது இன் பில்ட் ஹெச்டி வெப்கேமரா, வைபை, ப்ளூடூத் 5, 2 x யுஎஸ்பி 3.1, 1 x யுஎஸ்பி 2.0, 1 x ஹெச்டிஎம்ஐ 1.4டி, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

 இ லெர்னிங் மாடல் ஆனது

சியோமி மி நோட்புக் 14 இ லெர்னிங் மாடல் ஆனது அமேசான் மற்றும் மி வலைதளங்களில் கிடைக்கும். மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.34,999-ஆக உள்ளது.



Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *