நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
இதற்கிடையில் நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பெரும்பலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயேயும், சிலவை மாற்றமில்லாமலும் காணப்படுகிறது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், கெயில், ஈச்சர் மோட்டார்ஸ், ஐஓசி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் நிறுவனம், கோடக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி லைஃப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், ஒஎன்ஜிசி, ரிலையன்ஸ், லார்சன், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே சியன் பெயிண்ட்ஸ், இந்தஸிந்த் வங்கி, டைட்டன் நிறுவனம், கோடக் மகேந்திரா, ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
என்ன காரணம்?
அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.42 ரூபாயாக சரிவில் தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வில் 73.38 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
சர்வதேச சந்தைகள் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் இந்த வீழ்ச்சி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரம்
இந்திய சந்தைகள் தொடக்கத்திலேயே சற்று சரிவில் காணப்பட்ட நிலையில் தற்போதும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று சரிவில் தான் காணப்படுகிறது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 148.69 புள்ளிகள் குறைந்து, 49,120.63 ஆகவும், இதே நிஃப்டி 14.65 புள்ளிகள் குறைந்து, 14,470.10 ஆகவும் காணப்படுகிறது.
Source link