கமல்ஹாசன் நடிப்பில் எஸ்.ஏ ராஜ்கண்ணு தயாரிப்பில் கடந்த 1994ம் வருடம் மகாநதி படம் வெளியானது. மகாநதி ஷோபனா இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். கமலுக்கு ஜோடியாக சுகன்யா நடிக்க, பூர்ணம் விஸ்வநாதன், மகாநதி ஷங்கர், வி.எம்.சி ஹனிபா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் ஒரு உணர்ச்சிகரமான படம் காவேரி பாயும் ஓர் அழகிய ஊரில் வாழும் சாதாரண மனிதன் தேவையில்லாமல் பெரிய விவகாரங்களில் சிக்கி கொண்டு தனது மகள், மகன் போன்றோரை எல்லாம் காணக்கூடாத இடங்களில் கண்டு கலங்கும் ஒரு உணர்ச்சிகரமான படம்.
முதலில் அந்த குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்வதுதான் கதையின் அறிமுகமாக இருக்கும் அப்போது வரும் பொங்கல்பாடலான தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது என்ற இந்த பாடல்தான் பொங்கல் வந்தால் இன்றும் எல்லா இடத்திலும் கேட்கும் பாடலாக உள்ளது.
சித்ரா அவர்கள் இளையராஜா இசையில் பாடிய இந்த பாடல் இன்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு வலிமை சேர்க்கும் பாடலாக உள்ளது.
இப்படம் வந்து 27 வருடங்கள் ஆகிறது கமல்ஹாசன் நடித்த சகலகலா வல்லவனில் வரும் இளமை இதோ இதோ பாடல் ஜனவரி 1 புதுவருடத்திற்கும் கமல் நடித்த மஹாநதி பாடலான தை பொங்கலும் பாடல் பொங்கலுக்கும் ஒலிக்கும் பாடலாக தமிழ் மக்களால் மறக்க முடியாத பாடலாக உள்ளது.
இதையும் பாருங்க
Read More