குறிப்பாக லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 சாதனம் ஆனது அமேசான் மற்றும் லெனோவா வலைதளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் சில லெனோவா பிரத்யேக கடைகளிலும் இந்த சாதனம் கிடைக்கிறது.
லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 மாடல் ஆனது 14-இன்ச் மற்றும் 15-இன்ச் என இரண்டு திரை அளவுகளில் கிடைக்கிறது. மேலும் இந்த சாதனத்தில் க்யூ-கண்ட்ரோல் தொழில்நுட்ப வசதி இடம்பெற்றுள்ளது, எனவே பாதுகாப்பாக இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும்.
Vu அல்ட்ரா 4K டிவி ஆன்லைனில் அறிமுகம்! 43′ இன்ச் டிவி இவ்வளவு தான் விலையா?
லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 சாதனம் சமீபத்திய 10 வது தலைமுறை இன்டெல் கோர் செயலிகளால் இயக்கப்படுகிறது, மேலும் எஸ்.எஸ்.டி மற்றும் எச்.டி.டி சேமிப்பு விருப்பத்துடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இரண்டு பக்கங்களிலும் உள்ள குறுகிய பெசல்கள் ஐடியாபேட் ஸ்லிம் 3 க்கு ஒரு அருமையான தோற்றத்தை அளிக்கின்றன, அதே நேரத்தில் டால்பி ஆடியோ வீடியோ, ஸ்ட்ரீமிங் இசை அல்லது வீடியோ அரட்டைக்கு ஒரு தெளிவான ஒலியை வழங்குகிறது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 மாடல் வெப்கேம் தனியுரிமை ஷட்டருடன் வருகிறதுஇ இது பயன்பாட்டில் இல்லாதபோது மூடப்படலாம். கூடுதல் பாதுகாப்புக்காக ஆற்றல் பொத்தானில் கைரேகை ரீடரையும் இது கொண்டுள்ளது.
நேருக்கு நேர்: ஜியோ vs ஏர்டெல்., ஒரே விலை திட்டம் எது சிறந்தது?
வைஃபை, இரண்டு யூ.எஸ்.பி 3.1 போர்ட் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.மேலும் இந்த சாதனத்தை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 மாடல் ஆனது ரூ.26,990 மற்றும் ரூ.40,990-விலையில் விற்பனைக்கு வரும். மேலும் இந்த சாதனம் அதிகளவு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.