Connect with us

Travel

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

Published

on


வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

தற்போது எம்ஜி நிறுவனத்தின் நான்காவது தயாரிப்பான க்ளோஸ்ட்டர், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாவதற்கு தயாராகி விட்டது. இதனை இந்தியாவின் முதல் ஆட்டோனாமஸ் லெவல்-1 பிரீமியம் எஸ்யூவி என எம்ஜி நிறுவனம் கூறுகிறது. எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியை நாம் முதன் முறையாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் பார்த்தோம். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாடலை போன்றேதான், இதன் தயாரிப்பு நிலை வெர்ஷன் உள்ளது. ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளது என சொல்லலாம்.

புத்தம் புதிய எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு சமீபத்தில் கிடைத்தது. சோதனை செய்வதற்காக எங்களிடம் வழங்கப்பட்டது 4X4 ட்வின்-டர்போ வேரியண்ட் ஆகும். இதில், தொழில்நுட்ப வசதிகள் நிரம்பி வழிகின்றன. அத்துடன் எப்பேர்ப்பட்ட சவாலான நிலப்பரப்பையும் சந்திக்க இந்த கார் தயாராக உள்ளது. எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி எங்களிடம் கொஞ்ச நேரம் மட்டுமே இருந்தாலும், ஒவ்வொரு வினாடியும் எங்களை ஆச்சரியப்படுத்தி கொண்டே இருந்தது. டெஸ்ட் டிரைவ்வில் எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இந்த செய்தியில் உங்களுக்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள மேக்ஸஸ் டி90 எஸ்யூவி (Maxus D90 SUV) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கார்தான் எம்ஜி க்ளோஸ்ட்டர். மிக பிரம்மாண்டமான தோற்றத்தை பெற்றுள்ள இந்த காரின் நீளம் 5,005 மிமீ, அகலம் 1,932 மிமீ, உயரம் 1,875 மிமீ. அத்துடன் 2,950 மிமீ வீல் பேஸையும் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி பெற்றுள்ளது.

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் முன்பகுதி நேர்த்தியான ஹெட்லைட் யூனிட்டை பெற்றுள்ளது. இதன் உள்ளே ‘Full LED Tech’ என்ற பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. அதாவது ஹை மற்றும் லோ பீம் என இரண்டும் எல்இடி ப்ரொஜெக்டர் செட்அப்பை கொண்டுள்ளன. அதே சமயம் எல்இடி டிஆர்எல்களுடன், டர்ன் இன்டிகேட்டர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அவை மிகவும் பிரகாசமாக உள்ளன. ஆனால் துரதிருஷ்டவசமாக க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் பனி விளக்குகள் எல்இடிக்கு பதிலாக ஹாலோஜென் பல்ட் செட்அப்பைதான் பெற்றுள்ளன.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

அதே சமயம் இந்த காரில் கணிசமான அளவிற்கு க்ரோம் பூச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. கிடைமட்டமான 3 ஸ்லாட்களுடன் பெரிய க்ரில் அமைப்பை இந்த கார் பெற்றுள்ளது. முன்பக்க பம்பர், ஹெட்லைட்டிற்கு உள்ளே மற்றும் க்ரில் அமைப்பை சுற்றிலும் என க்ரோம் பூச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் க்ளோஸ்ட்டர் காரின் ஹூட்டில் கோடுகள் மற்றும் மடிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது இந்த காரின் ‘மஸ்குலர்’ நிலைப்பாட்டை இன்னும் மேம்படுத்துகிறது.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இனி காரின் பக்கவாட்டு பகுதிக்கு வருவோம். இங்கே இருபுறமும் வழங்கப்பட்டுள்ள ‘Brit Dynamic’ பேட்ஜ்தான் முதலில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். இந்த பேட்ஜ் உண்மையில் இந்த எஸ்யூவியை லிமிடெட் எடிசன் போல தோன்ற செய்கிறது. ஆனால் இது மிகவும் அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதேபோன்று அழகான 19 இன்ச் ட்யூயல்-டோன் மல்டி-ஸ்போக் அலாய் வீல்களை க்ளோஸ்ட்டர் எஸ்யூவி பெற்றுள்ளது. காரின் ஒட்டுமொத்த அளவுடன் ஒப்பிடும்போது அலாய் வீல்களின் அளவு சற்று சிறியதாக தோன்றுகிறது. எனினும் பெரிய வீல் ஆர்ச்சை இது பெற்றுள்ளது.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் பாடியின் நிறத்திலேயே ஓஆர்விஎம்கள் வழங்கப்பட்டுள்ளன. 360 டிகிரி பார்வைக்காக இரண்டு பக்க ஓஆர்விஎம்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மிகவும் நெருக்கமான இடங்களில் பார்க்கிங் செய்வதற்கு இது உதவும். இந்த காரின் விண்டோக்களை சுற்றிலும், முன் பக்க க்ரில் அமைப்பில் இருப்பதை போன்ற அலுமினியம் மெட்டீரியல் வழங்கப்பட்டுள்ளது. மேற்கூரையில் உள்ள ரூஃப் ரெயில்கள் வரை அது நீள்கிறது.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இனி காரின் பின் பகுதிக்கு நகரலாம். இங்கே நேர்த்தியான தோற்றம் கொண்ட எல்இடி டெயில் லைட் யூனிட்டை எம்ஜி க்ளோஸ்ட்டர் பெற்றுள்ளது. இதுதவிர பின்பகுதியில் சில பேட்ஜ்களும் வழங்கப்பட்டுள்ளன. இதில், GLOSTER பேட்ஜூம் ஒன்று. பூட்டின் மேலே பெரிய எழுத்துக்களில் ‘க்ளோஸ்ட்டர்’ என எழுதப்பட்டுள்ளது. எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி கார், எலெக்ட்ரிக் பூட் லிட்டை பெற்றுள்ளது. அத்துடன் ‘ஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் ஓபனிங்’ வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது கால் அசைவு மூலமாகவே திறக்கலாம். அத்துடன் இரண்டு டெயில்லைட்களையும் இணைக்கும் வகையில் க்ரோம் பட்டையும் இடம்பெற்றுள்ளது.

இதுதவிர ரியர் பார்க்கிங் கேமராவையும் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி பெற்றுள்ளது. ஆனால் நேர்மையாக சொல்வதென்றால், இந்த கேமராவின் வீடியோ தரத்தை நாங்கள் விரும்பவில்லை. இது பிரீமியம் எஸ்யூவி என்பதால், கேமரா எச்டி வீடியோ தரத்தை வழங்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம்.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இன்டீரியர்கள்

இனி காரின் இன்டீரியருக்குள் செல்வோம். இங்கே விசாலமான கேபின் நம்மை வரவேற்கிறது. இன்டீரியர் முழுக்க லெதர் மற்றும் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பேனல்களின் பயன்பாடு மிகவும் குறைவாக உள்ளது. எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் டேஷ்போர்டு, ட்யூயல்-டோன் வண்ணத்தில் கவர்ச்சிகரமாக வழங்கப்பட்டுள்ளது. 64 வெவ்வேறு வித்தியாசமான ஆம்பியன்ட் லைட் செட்டிங்குகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பையும் இந்த எஸ்யூவி வழங்குகிறது.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இன்டீரியரை பொறுத்தவரை நாங்கள் விரும்பாத ஒரு விஷயம் ஏசி வெண்ட்கள்தான். அவை மிகவும் தாழ்வாக வழங்கப்பட்டுள்ளன. எனவே குளிர்ச்சியான காற்றோட்டத்தை உங்கள் முகம் பெறுவது சற்று சவாலான விஷயமாகதான் இருக்கும். டேஷ்போர்டின் மையப்பகுதியில் 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய திரையாக இருப்பதுடன், பயன்படுத்துவதற்கு அருமையாக உள்ளது. காருக்கு உள்ளே இன்டர்நெட் இருப்பதால், நீங்கள் கானா ஆப் மூலம் பாடல்களை கேட்கலாம். நேவிகேஷனை பயன்படுத்தலாம். வானிலையை சரிபார்க்கலாம் மற்றும் வீடியோக்களையும் ஸ்ட்ரீம் செய்யலாம். ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே செயலிகளை இந்த சிஸ்டம் சப்போர்ட் செய்யும்.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரில், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் மையப்பகுதியில் 8 இன்ச் எல்இடி எம்ஐடி ஸ்க்ரீன் இடம்பெற்றுள்ளது. இது கார் பற்றிய ஏராளமான தகவல்களை நமக்கு வழங்குகிறது. எம்ஐடி ஸ்க்ரீனின் இருபுறமும் பக்கவாட்டில், ஸ்பீடோமீட்டர் மற்றும் டேக்கோமீட்டர் வழங்கப்பட்டுள்ளன.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இந்த காரில் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு கண்ட்ரோல்களுக்கான ஸ்விட்ச்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்டியரிங் வீலின் இடது புறத்தில் க்ரூஸ் கண்ட்ரோல் செட்டிங்குகளை அட்ஜெஸ்ட் செய்வதற்கான பட்டன்கள் உள்ளன. அதே சமயம் வலது பக்கத்தில், இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், குரல் கட்டளை மற்றும் எமர்ஜென்ஸி ஹெல்ப்லைன் கால் சென்டர் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கான பட்டன்கள் உள்ளன.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இனி எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் இருக்கை அமைப்பு குறித்து பார்க்கலாம். 6 மற்றும் 7 சீட்டர் வெர்ஷன்களில் இந்த எஸ்யூவி வருகிறது. நாங்கள் 6 சீட்டர் வெர்ஷனை டெஸ்ட் டிரைவ் செய்தோம். இதன் இரண்டாவது வரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் வரிசையில் உள்ள இரண்டு இருக்கைகளையும் மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்ய முடியும். ஆனால் ஓட்டுனர் இருக்கைக்கு மட்டுமே ‘சீட் மெமரி’ வசதி வழங்கப்பட்டுள்ளது. முன்வரிசையில் உள்ள இரண்டுமே வென்டிலேட்டட் இருக்கைகள்தான். ஆனால் ஓட்டுனர் இருக்கைக்கு ஹீட்டிங் (Heating) வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் இருக்கைக்கு 12 வகையான மசாஜ் பங்ஷன் வசதி அளிக்கப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பு. முன் வரிசை இருக்கைகளை பொறுத்தவரை கீழ் தொடைக்கு நல்ல சப்போர்ட் கிடைக்கிறது.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இரண்டாவது வரிசையில் உள்ள இரண்டு கேப்டன் இருக்கைகளும், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹேண்ட்ரெஸ்ட்டை பெற்றுள்ளன. அத்துடன் பக்கவாட்டில் கப் ஹோல்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் லெக்ரூம் மற்றும் பேக்ரெஸ்டுகளுக்கு, இந்த இருக்கைகளை மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்ய முடியும். 3-ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டமை எம்ஜி க்ளோஸ்ட்டர் கொண்டிருப்பதால், டெம்ப்ரேச்சர் மற்றும் ஏர்-ஃப்ளோ கண்ட்ரோல்களுடன் இதன் மத்திய வரிசையும் சென்டர் ஏசி வெண்ட்களை பெற்றுள்ளது.

மேற்கூரையின் பக்கவாட்டிலும் ஏசி வெண்ட்கள் உள்ளன. இவை கேபினை வேகமாக குளிர்ச்சியாக்க உதவி செய்கின்றன. 7 சீட்டர் வெர்ஷனில், கேப்டன் இருக்கைகளுக்கு பதிலாக 60:40 ஸ்பிளிட் வசதியுடன் பென்ச் செட்அப் இடம்பெற்றுள்ளது.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

மூன்றாவது வரிசை இருக்கைகளை பொறுத்தவரை போதுமான அளவிற்கு ஹெட்ரூம் இருக்கிறது. ஆனால் இது குழந்தைகளுக்கும் மற்றும் சராசரி அளவுடைய நபர்களுக்கும் மட்டுமே ஏற்றதாக இருக்கும். உயரமான நபர்களும் மூன்றாவது வரிசை இருக்கைகளில் அமரலாம். ஆனால் அவர்களுக்கு போதுமான லெக்ரூம் இருக்காது என்பதால், கொஞ்ச தூரம் பயணித்த பிறகு அவர்கள் அசௌகரியமாக உணர தொடங்கலாம்.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

மூன்றாவது வரிசை இருக்கைகள் அதன் சரியான பொஷிஷனில் நிமிர்ந்து இருந்தால், 343 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கும். இது இரண்டு பைகளை வைப்பதற்கு போதுமானது. இன்னும் கூடுதல் இடவசதி தேவைப்பட்டால், மூன்றாவது வரிசை இருக்கைகளை முழுவதுமாக கீழே மடித்து கொள்ளலாம். இதன் மூலம் 1,350 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கும். இது அதிக பொருட்களை வைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இன்ஜின் & ஹேண்ட்லிங்

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரில், 2 லிட்டர், ட்வின்-டர்போ, டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 218 பிஎச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. இதில், 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ON DEMAND 4-வீல் டிரைவ் ஆப்ஷனையும், எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி பெற்றுள்ளது. க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரில், நார்மல், ஈக்கோ, ஸ்போர்ட், சேண்ட், மட், ராக், ஸ்னோ மற்றும் ஆட்டோ ஆகிய டிரைவிங் மோடுகளையும், ஹில் டெசண்ட் வசதியையும் எம்ஜி நிறுவனம் வழங்கியுள்ளது.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

தேர்வு செய்யப்படும் டிரைவிங் மோடை பொறுத்து, த்ராட்டில் மற்றும் ஸ்டியரிங் ரெஸ்பான்ஸ் மாறுகிறது. த்ராட்டில் ரெஸ்பான்ஸ் உறுதியாகவும், உற்சாகம் அளிக்க கூடியதாகவும் இருப்பதால், ஸ்போர்ட் மோடில் எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. பவர் டெலிவரியை பொறுத்தவரை, எம்ஜி க்ளோஸ்ட்டர் சுமார் இரண்டு டன் எடை கொண்ட பிரம்மாண்ட எஸ்யூவி. எனவே இது உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்யும் என எதிர்பார்க்க வேண்டாம். ஆனால் 2200 ஆர்பிஎம்களை கடக்கும்போது, ஆக்ஸலரேஷனில் நீங்கள் எழுச்சியை உணரலாம். கிட்டத்தட்ட 4800 ஆர்பிஎம் என்ற நிலையில் இந்த எஸ்யூவி சிகப்பு கோடுகளை தொடுகிறது.

கியர் பாக்ஸ் ஸ்மூத் ஆக உள்ளது. ஆனால் ரெஸ்பான்ஸ் மெதுவாக இருப்பதை பின்னடைவாக கூறலாம். ஆனால் மேனுவல் மோடில், கியர் பாக்ஸின் கட்டுப்பாட்டை நீங்கள் கையில் எடுக்கும்போது, கியர் மாற்றுவது சற்று ‘ஷார்ப்’ ஆக இருக்கும். எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவியில் பேடில் ஷிஃப்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. வேகமாக கியர்களை மாற்றும் வேலையை இது எளிதாக்குகிறது.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரின் ரைடு குவாலிட்டி அட்டகாசமாக இருக்கிறது. குண்டும், குழியுமான சாலைகளை இந்த கார் எளிதாக கடக்கிறது. மோசமான சாலைகளில் பயணம் செய்வதை போன்ற உணர்வு ஏற்படவில்லை. இதற்கு இந்த காரின் மென்மையான சஸ்பென்ஸன் செட் அப்பிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். அத்துடன் என்விஹெச் லெவல்களிலும், எம்ஜி நிறுவனம் சிறப்பாக வேலை செய்துள்ளது. சாலை மற்றும் இன்ஜின் சத்தம் கேபினுக்குள் கிட்டத்தட்ட கேட்கவில்லை. ஆனால் க்ளோஸ்டர் எஸ்யூவியில் அதிகப்படியான பாடி ரோல் இருப்பதை ஒரு குறையாக குறிப்பிடலாம்.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரின் ஸ்டியரிங் வீல் மிகவும் லேசாக உள்ளது. அதிகமான வேகத்திலும் ஸ்டியரிங் வீல் இறுக்கமாக மாறவில்லை. இது நம்பிக்கையுடன் ஓட்டுவதில் பிரச்னைகளை உருவாக்கும் என்பதால், சில சமயங்களில் ஆபத்தை ஏற்படுத்தலாம். அதேபோல் ஸ்டியரிங் வீலிடம் இருந்து கிடைக்கும் ரெஸ்பான்ஸூம், எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் இல்லை. உடனடியாக லேன் மாறுவது போன்ற விஷயங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

ஏற்கனவே குறிப்பிட்டதை போல், தொழில்நுட்ப வசதிகளில் எம்ஜி க்ளோஸ்ட்டர் தலைசிறந்து விளங்குகிறது. இந்த காரில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோலுக்காக, ஐஆர்விஎம்மிற்கு பின்னால் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி வேலை செய்யும் தெரியுமா? நீங்கள் இந்த காரில் க்ரூஸ் கண்ட்ரோலில் ஒரு குறிப்பிட்ட வேகத்தை செட் செய்த பிறகு, முன்னால் செல்லும் வாகனம் கேமரா மூலம் கண்டறியப்பட்டால், கார் அதற்கு ஏற்ப தானாகவே வேகத்தை குறைத்து கொள்ளும். அதன்பின் முன் பகுதியில் தெளிவான பாதை கிடைத்தவுடன், நீங்கள் ஏற்கனவே செட் செய்திருந்த வேகத்திற்கு கார் தானாகவே வந்து விடும். இன்பில்ட் ஜிபிஎஸ் சிஸ்டத்தின் உதவியுடன் இவை அனைத்தும் செய்யப்படுகின்றன.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

இதேபோல் இன்னும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை எம்ஜி க்ளோஸ்ட்டர் பெற்றுள்ளது. இதில், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஃப்ரண்ட் கொலிஷன் வார்னிங், ஆட்டோனாமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் மற்றும் ஆட்டோ பார்க் அஸிஸ்ட் ஆகியவை முக்கியமானவை. எனவேதான் எம்ஜி மோட்டார் நிறுவனம் க்ளோஸ்ட்டர் காரை, இந்தியாவின் முதல் ஆட்டோனாமஸ் லெவல்-1 பிரீமியம் எஸ்யூவி என குறிப்பிடுகிறது. இவை எல்லாம் தவிர சோர்வு நினைவூட்டல் அமைப்பையும் (Fatigue Reminder System), எம்ஜி க்ளோஸ்ட்டர் பெற்றுள்ளது. இதன்படி நீங்கள் தொடர்ந்து நீண்ட நேரமாக கார் ஓட்டி கொண்டிருப்பதை, காரில் உள்ள சென்சார்கள் கண்டறிந்தால், ஓய்வு எடுக்கும்படி உங்களுக்கு அறிவுறுத்தப்படும்.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கிட்டத்தட்ட 210 மிமீ. கிட்டத்தட்ட எப்பேர்ப்பட்ட நிலப்பரப்பிலும் பயணம் செய்வதற்கு இது போதுமானது. எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி எங்களிடம் மிக குறுகிய நேரம் மட்டுமே இருந்தது. எனவே எங்களால் அதனை ஆஃப் ரோடிற்கு எடுத்து சென்று, அந்த திறன்களை பரிசோதிக்க முடியவில்லை. அத்துடன் மைலேஜ் பற்றியும் சோதிக்க முடியவில்லை. எனினும் நீண்ட நேரத்திற்கு எங்களுக்கு இந்த கார் கிடைக்கும்போது அவற்றை கண்டிப்பாக செய்வோம். அதுவரை காத்திருங்கள்.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

போட்டியாளர்கள், எதிர்பார்க்கப்படும் விலை

இந்திய சந்தையில் டொயோட்டா பார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உள்ளிட்ட கார்களுக்கு எம்ஜி க்ளோஸ்ட்டர் வடிவில் கடுமையான போட்டி காத்து கொண்டுள்ளது. 40 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் இந்த பிரீமியம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில்தான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும். வரும் தீபாவளி பண்டிகை காலத்தை ஒட்டி, எம்ஜி க்ளோஸ்ட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேற லெவல் டெக்னாலஜி! பார்ச்சூனரின் அடி வயிற்றை கலங்க வைத்த எம்ஜி க்ளோஸ்ட்டர்! ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ

டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தங்களது முதல் தயாரிப்பான ஹெக்டர் எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்த பிறகு, மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்து இழுத்துள்ளது. தொழில்நுட்ப வசதிகளில் அதைக்காட்டிலும் பல மடங்கு மேம்பட்ட மாடலாக க்ளோஸ்ட்டர் உள்ளது. இந்த கார் மிக பிரம்மாண்டமாக தோற்றத்தில் இருப்பதுடன், விசாலமான கேபினையும், அட்டகாசமான தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றுள்ளது. அத்துடன் சிறப்பான செயல்திறன் வெளிப்படுவதுடன், சௌகரியமான ஓட்டுதல் அனுபவத்தையும் வழங்குகிறது. இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து அம்சங்களுடனும் ஒரு பிரம்மாண்ட எஸ்யூவி காரை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற காராக எம்ஜி க்ளோஸ்ட்டர் இருக்கும்!!!

Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *