Tech
Avita Essential Laptop Launched: Specs, Features and More
Published
4 days agoon
By
admin
|
இந்தியாவில் புதுமுக பிராண்டு அவிட்டா எசென்ஷியல் பெயரில் புதிய லேப்டாப் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. குறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய லேப்டாப் 14-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1920×1080 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

இந்த பிரத்யேக சிப் டிசைன் லேப்டாப் அதிக சத்தத்தை எழுப்பாது. மேலும் இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 6 மணி நேரம் பேக்கப் வழங்கும் என அவிட்டா தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் முழு விவரங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
அவிட்டா எசென்ஷியல் லேப்டாப் மாடல் ஆனது 14-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1920×1080 பிக்சல் தீர்மானம் அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.
இந்த புதிய லேப்டாப் மாடலில் டூயல் கோர் இன்டெல் செலரியான் என்400 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் உள்ளிட்ட அம்சங்களுக்கு மிக அருமையாக செயல்படும் இந்த லேப்டாப் மாடல்.

அவிட்டா எசென்ஷியல் லேப்டாப் மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் மேலும் இதில் இரண்டு 0.8 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது தெளிவான ஒலியை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இந்த புதிய சாதனத்தில் விண்டோஸ் 10 ஒஎஸ் இருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலம் இந்த சாதனத்தில் 2எம்பி கேமரா, ஆன்டி-கிளேர் ஸ்கிரீன் பேனல், டெக்ஸ்ச்சர் பினிஷ் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது இந்த அவிட்டா எசென்ஷியல் லேப்டாப்.
அவிட்டா எசென்ஷியல் லேப்டாப் மாடலில் வைபை, ப்ளூடூத், ஹெச்டிஎம்ஐ, யுஎஸ்பி போர்ட், மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

அட்டகாசமான அவிட்டா எசென்ஷியல் மாடல் இந்திய சந்தையில் ரூ.17,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed