Business
ரிலையன்ஸ்-ஐ விஞ்சிய டாடா, ஹெச்டிஎஃப்சி.. முகேஷ் அம்பானி சோகம்..! | Tata, HDFC groups climbed past record set by reliance industries
Published
1 week agoon
By
admin

டாடா குழும சந்தை மூலதனம்
இப்படி இருபெரும் குழுமங்களும் முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சாதனையை உடைத்துக் காட்டியுள்ளன. கடந்த ஜனவரி 12ம் தேதியின் படி, இந்த பங்கின் முடிவு விலையின் அடிப்படையில் 18 நிறுவனங்களின் சந்தை மூலதனமானது, 16,97,766 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது குறிப்பாக டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், டைட்டன், டாடா நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்கு விலையானது பெரும் உச்சத்தினை கண்டன. இதன் காரணமாக அதன் சந்தை மூலதனங்களும் ஏற்றம் கண்டுள்ளன.

ஹெச்டிஎஃப்சி குழுமம்
இதே ஹெச்டிஎஃப்சி குழுமத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள நான்கு நிறுவனங்களின் சந்தை மூலதனம் கூட்டாக, 15,23,489 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதத்தில் 200 பில்லியன் டாலரினை தொட்டது.

முதல் நிறுவனம் ரிலையன்ஸ் தான்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் முதல் முதலாக 200 பில்லியனை தொட்ட முதல் நிறுவனம் ரிலையன்ஸ் ஆகும். எனினும் அதன் உச்சத்தில் இருந்து தற்போது கிட்டதட்ட 16 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. ரிலையன்ஸ் மற்றும் அதன் பட்டியலிடப்பட்டுள்ள கூட்டு நிறுவனங்களின் சந்தை மூலதனம் 13,01,426 கோடி ரூபாயாகும்.

சொத்து மதிப்பில் முக்கிய பங்கு
எப்படி இருப்பினும் அம்பானியின் சொத்து மதிப்பில் முக்கிய பங்கு வகிப்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான். அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் ரீரெயில் வணிகத்தில் பங்குகள் விற்றபின் இதன் மதிப்பு இருமடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் திரட்டப்பட்ட பெரிய அளவிலான நிதியே இதற்கு காரணமாகும்.

செம வளர்ச்சியில் அதானி
அதே நேரம் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் மற்றொரு இந்திய குழுமம் அதானியாகும். அதானி குழுமத்தில் அதானி எனர்ஜியின் பங்கு விலையானது, கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 600 சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் கண்டுள்ளது. அதானி கேஸ் பங்கு விலையானது 300 சதவீதத்திற்கும் மேலாக ஏற்றம் கண்டுள்ளது. எனினும் பஜாஜ் குழுமங்கள் அதானியை விட முன்னிலையில் உள்ளது கவனிக்கதக்கது.
