Business
லாபத்தில் 16% வளர்ச்சி.. மாஸ்காட்டும் இன்போசிஸ்..! | Infosys Q3 Net profit jumps 16.8%, attrition rate drop to 10%
Published
3 days agoon
By
admin

லாபத்தில் 16% வளர்ச்சி
டிசம்பர் 2020 உடன் முடிந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிலையான வர்த்தக வளர்ச்சி மற்றும் அதிகளவிலான செலவின குறைப்புக் காரணமாக இந்நிறுவனத்தின் லாபம் சுமார் 16 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதன் வாயிலாக டிசம்பர் 2019ல் வெறும் 4,466 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்ற இன்போசிஸ் டிசம்பர் 2020ல் 5,215 கோடி ரூபாய் லாபத்தை அடைந்தது.

இன்போசிஸ் வருவாய்
கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் சுமார் 12.3 சதவீத வளர்ச்சியில் 25,927 கோடி ரூபாய் அளவிலான வருவாயை பெற்றது. இது செப்டம்பர் காலாண்டை விட 5.5 சதவீதம் அதிகமாகும்.
இதேபோல் நிலையான நாணய மதிப்பில் இதன் அளவீடு 6.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

7.13 பில்லியன் டாலர்
இந்த டிசம்பர் காலாண்டில் மட்டும் இன்போசிஸ் சுமார் 7.13 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. மேலும் புதிதாகப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்ட டிஜிட்டல் பிரிவு வர்த்தகம் மூலம் கிடைக்கும் வருவாய் மொத்த வருவாயில் 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் டிஜிட்டல் பிரிவு வருவாய் அளவு கடந்த வருடத்தை விடவும் 31.3 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

முக்கிய நிறுவனங்கள்
இந்த டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் புதிதாக வேன்கார்டு, டயாம்லர், ரோல் ராய்ஸ் என 3 முக்கிய மற்றும் முன்னணி நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனத்தின் டிஜிட்டல் வர்த்தகச் சேவைகள் பெரிய அளவிலான வர்த்தகத்தை உருவாக்கி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள் வெளியேற்பு விகிதம்
இதோடு இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்பு விகிதம் 15.8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைந்துள்ளது இந்நிறுவனத்தின் நிலையான வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாகப் பார்க்கப்படுகிறது.