Entertainment
Bigg Boss Promo Kaada Naada Task Agian For The Contestant
Published
2 days agoon
By
admin
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.
இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாம் சீசனில் ரித்விகா, மூன்றாம் சீசனில் முகன் என்று ஒரு ஆண், ஒரு பெண் மீண்டும் ஒரு ஆண் என்று பிக் பாஸ் டைலை வென்ற நிலையில் தற்போது இந்த சீசனில் ரம்யா, கேப்ரில்லா என்று இரண்டு பெண் போட்டியாளர்கள் இறுதி போட்டியில் இருக்கின்றனர்.
ஆனால், இவர்கள் இருவரும் டைட்டிலை வெல்ல வாய்ப்பில்லை என்பதால் இம்முறையும் ஒரு ஆண் தான் வெற்றிபெற இருக்கிறார். மேலும், இந்த சீசனில் யார் வெற்றிபெறுவார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால், இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே.
இந்த வாரம் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் ரீ-என்ட்ரி கொடுத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட காடா நாடா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் போது தான் சுரேஷ் சக்ரவர்த்திக்கும் சனம் ஷெட்டிக்கும் மிகப்பெரிய சண்டை வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல வேலை இப்போ சுரேஷ் இல்லை