Entertainment
Bigg Boss Gabriella Walks Out With Offered Money
Published
1 week agoon
By
admin
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா என்று 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா,ஆஜீத் ஆகிய என்று 11 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஷிவானி வெளியேற்றப்பட்டார்.
இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் தான் எஞ்சி இருக்கிறது.தற்போது பாலாஜி ஆரி ரியோ சோம் சேகர் கேப்ரில்லா ரம்யா பாண்டியன் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி ஆகியுள்ள நிலையில் யார் டைட்டிலை வெல்வார் என்பதற்கான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.. ஆனால், இந்த சீசனில் ஆரி தான் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடிக்கப்போவது யார் என்பது தான் போட்டியே.
இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் கேப்ரில்லா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக இறுதிப்போட்டிக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் தான் இந்த பணப் பெட்டி சலுகை அளிக்கப்படும். ஆனால், இந்த சீசன் நிறைவடைய இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் இன்னும் கூட பணப் பெட்டி டாஸ்க் கொடுக்கப்படாமல் தான் இருந்து வந்தது. இப்படி ஒரு நிலையில் இன்று அந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதில் கேப்ரில்லா பணப்பேட்டியை பெற்றுக்கொண்டு பிக் பாஸில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சீசனில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நபர்களில் கேப்ரில்லா மற்றும் சோம் சேகர் இருவருக்கும் மூன்றாம் இடம் கிடைப்பது கூட சந்தேகமே. எனவே, தான் கேப்ரில்லா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு இறுதி போட்டிக்கு முன் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வேளை கேப்ரில்லா இந்த முடிவை எடுத்திருந்தால் அது மிகவும் சிறப்பான முடிவு என்று தான் பலரும் கூறி வருகின்றனர்.