Clubhouse-க்கு போட்டியாக உருவான இந்தியாவின் Fireside! சிங்காரி நிறுவனம் அறிமுகம்

4 days ago 1
Chingari founders launch Fireside, an Indian alternative to Clubhouse

சிங்காரி பயன்பாட்டின் நிறுவனர்கள் செவ்வாயன்று ஃபயர்சைடு “Fireside” என்ற புதிய ஆடியோ அடிப்படையிலான சமூக வலைத்தளத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளனர். இந்த இயங்குதளம் iOS மற்றும் Android இரண்டிலுமே இப்போது பீட்டா பதிப்பாக கிடைக்கிறது.

ஃபயர்சைடு பயன்பாட்டின் கான்செப்ட் பிரபலமான கிளப்ஹவுஸ் பயன்பாட்டைப் போன்றது தான். கிளப்ஹவுஸ் இதுவரை iOS பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. பயனர்கள் இந்த தளத்தில் நேரலையில் ஆடியோ மீட்டிங்கை ஹோஸ்ட் செய்யலாம். 

இதன் இன்டர்ஃபேஸ் கிளப்ஹவுஸ் மற்றும் ட்விட்டரின் Spaces பயன்பாடுகளுக்கு ஒத்ததாகவே இருக்கும். அடிப்படை ஆடியோ அம்சங்களைத் தவிர, இந்த பயன்பாட்டில் குழு அம்சமும் உள்ளது. இது வாட்ஸ்அப் குரூப் போன்றது, ஆனால் குரல் வடிவில் மட்டுமே உரையாடல்களை மேற்கொள்ள முடியும். இந்த தளம் பல்வேறு இந்திய மொழிகளிலும் கிடைக்கும்.

ஆடியோ அடிப்படையிலான சமூக வலைப்பின்னல் தளங்கள், குறிப்பாக கிளப்ஹவுஸ், உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன. IOS- பிரத்தியேகமாக இருந்தபோதிலும், கிளப்ஹவுஸ் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வருடத்திற்குள் ஒரு குறிப்பிடத்தக்க பயனர் தளத்தையும் சுமார் 4 பில்லியன் டாலர் வருவாயையும் பெற்றுள்ளது. கிளப்ஹவுஸின் புகழை அடுத்து ட்விட்டர் (Spaces) மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்களும் ஆடியோ அடிப்படையிலான பயன்பாடுகளை உருவாக்க தொடங்கியுள்ளன. ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தவிர, லிங்க்ட்இன் மற்றும் ரெடிட் போன்றவையும் ஆடியோ தயாரிப்புகளை உருவாக்குகின்றன. இந்தியாவில், Leher போன்ற பயன்பாடுகளும் கிளப்ஹவுஸுக்கு ஒரு மாற்றை வழங்க முயற்சிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Read Entire Article